Show all

ரூ500க்குள் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்! தரவு அதிகம் பயன்படுத்தாதவர்களுக்கு- ஏர்டெல், ஐடியா, ஜியோவில்

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உட்பட அனைத்து முதன்மை தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் ரூபாய் ஐநூறுக்குள் நல்லதொரு திட்டத்தை வழங்குகின்றனர். 

08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உட்பட அனைத்து முதன்மை தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் தங்கள் முன்கட்டணத் திட்டங்களை முதன்மையாக 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் ஆகிய மூன்று செல்லுபடிகால கட்டமைப்புகளில் வழங்குகிறார்கள். 

இதில் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் மீள்நிரப்பு (ரீசார்ஜ்) செய்ய வேண்டிய கட்டாயமில்லை. குறிப்பாக மாதம் தோறும் மீள்நிரப்பு செய்யச் சிரமப்பட விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு இது வசதியாக இருக்கும். 

நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களைத் தேர்வு செய்து நிம்மதியாக இருப்பதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். 

இந்தத் திட்டம் நானூறு ரூபாயில் இருந்து அறுநூறு ஆகி தற்போது எழுநூறைக் கடந்துள்ள நிலையில், எனக்கு அன்றாடத் தரவு எல்லாம் அவ்வளவாகத் தேவையில்லை. ஒன்னரை ஜிபி இரண்டு ஜிபி என்று எனக்கு வழங்கும் தரவை ஐந்து விழுக்காடு கூட முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. நான் பயன்படுத்தாத தரவுக்கு வெட்டியாக ஏன் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அழவேண்டும் என்று கருதுகிறவர்களுக்கு ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உட்பட அனைத்து முதன்மை தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் ரூபாய் ஐநூறுக்குள் நல்லதொரு திட்டத்தை வழங்குகின்றனர். 

குறிப்பாக இவை அனைத்தும் 84 நாட்கள் செல்லுபடியாகும் காலக்கெடுவுடன் ரூ.500 விலைக்குள் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. 

ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரும் இந்த விலைப் புள்ளியின் கீழ் தலா ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. 

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 455 முன்கட்டணத் திட்டமானது அதன் பயனர்களுக்கு மொத்தமாக 6ஜிபி தரவை வழங்குகிறது. இத்துடன் 900 சேதி மற்றும் வரம்பற்ற அழைப்புகளை 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகைக்கு வழங்குகிறது. 

ரிலையன்ஸ் ஜியோவைப் பொறுத்தவரை, ஏர்டெல் போன்ற திட்டமானது, 1000 சேதி மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் 6ஜிபி தரவை வழங்குகிறது. இது ரூ.395 கட்டணத்தில் கிடைக்கிறது.

அடுத்தபடியாக வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 459 என்ற விலையைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் அனைத்து தொலைத் தொடர்புகளுக்கான வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 1000 சேதி நன்மை மற்றும் ஆறு ஜிபி தரவு எனக் கொண்டுள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,106.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.