Show all

அரபு அமீரகத்தின் பொன் வருகைஇசைவு! பெற்றுள்ள தமிழ்நடிகர், இயக்குநர் இரா.பார்த்திபனுக்கு நமது வாழ்த்துக்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொன் வருகைஇசைவு (கோல்;டன் விசா) பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான இரா.பார்த்திபன் பெற்றுள்ளார்.

09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் அதிகாரிகள் பொன் வருகைஇசைவு வழங்கினர். தனக்கு பொன் வருகைஇசைவு வழங்கிய துபாய் அரசுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஒன்றியத் திரைப்பட விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு படத்திற்காக சிறப்பு நடுவர் விருதை பெற்ற பார்த்திபனுக்கு தற்போது இந்தச் சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொன் வருகைஇசைவு (கோல்;டு விசா) பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான இரா.பார்த்திபன் பெற்றுள்ளார். திரைப்படத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொன் வருகைஇசைவு என்பது நீண்ட கால குடியிருப்பு அனுமதியாகும், இது ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது, மேலும் தானாகவே புதுப்பிக்கப்படும் வசதியையும் கொண்டதாகும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,107.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.