Show all

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணக் காட்சிகள் படவரியில் வெளியீடு

திருமணமாகி ஒரு மாதத்திற்குப் பிறகும் திருமணக் காணொளியை ஒப்பந்த நிறுவனம் வெளியிடாத நிலையில், தனது முதல் மாத திருமணநாளில் அந்தப் புகைப்படங்களை படவரியில் பகிர்ந்துக் கொண்டார் விக்னேஷ் சிவன்.

05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: திருமணமாகி ஒரு மாதம் கழித்து தனது படவரி பக்கத்தில் (இன்ஸ்டகிராம்) நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண படங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் வெளியீட்டு உரிமை உட்பட, திருமணத்திற்கு செலவழித்த தொகையை திருப்பித் தருமாறு நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன் விக்கிக்கு கவன அறிக்கை அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 26,வைகாசி (ஜூன் 9) அன்று மகாபலிபுரத்தில் பெருஞ்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

அதில், விருந்தினர்களுக்கான விருந்தில் ஒரு இலைக்கு 3500 ரூபாய் செலவானதாம். விருந்தினர்களுக்கான அறைகள், உணவு, ஒப்பனை, பாதுகாப்பு என அனைத்திற்கும் நெட்பிளிக்ஸ் செலவழித்ததாக முன்னரே செய்தி வெளியாகியிருந்தது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் சூர்யா, ரஜினிகாந்த், ஷாருக்கான், ஜோதிகா, அனிருத் என பல பேரறிமுகங்கள் கலந்து கொண்டனர்.

திருமணமாகி ஒரு மாதத்திற்குப் பிறகும் திருமணக் காணொளியை வெளியிடாத நிலையில், தனது முதல் மாத திருமணநாளில் அந்தப் புகைப்படங்களை படவரியில் பகிர்ந்துக் கொண்டார் விக்னேஷ் சிவன்.

தாமதமானால் படங்களைப் பார்க்கும் ஆர்வம் கொண்டாடிகளுக்குக் குறைந்துவிடும் என்பதால் தான் விக்கி படவரியில் படங்களைப் பகிர்ந்ததாக சொல்லப்பட்டது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணக்; காணொளியை வெளியிடும் ஒப்பந்தத்தில் இருந்து நெட்பிளிக்ஸ் பின்வாங்கியதாக ஏற்கனவே செய்தி வெளியாகியும் இருந்தது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,316.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.