Show all

விஜய்சேதுபதியின் அசத்தல் பதில்! வீட்டில் வருமான வரிச்சோதனை நடந்ததாவென்ற கேள்விக்கு

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள '96'படம் வரும் வியாழக் கிழமை வெளியாக உள்ளது. இதில் விஜய் சேதுபதி 16,36,96 அகவை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கான சிறப்பு சந்திப்பு நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, திரிசா செய்தியாளர்களின் பல கேள்விக்கு பதிலளித்தனர். 

விஜய் சேதுபதியிடம், உங்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக தகவல்கள் வருகிறதே என்ன சொல்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், 'என் வீட்டில் வருமானவரிச் சோதனை நடக்கவே இல்லை. என் வீடு மாதிரி அரங்கம் அமைத்து சோதனை பண்ணி இருக்கலாம் என விஜய் சேதுபதி கிண்டல் செய்துள்ளார்.  
இப்பல்லாம் ஏதாவது பேசிட்டு நான் சொல்லவே இல்லை, என் அட்மின் பேசிட்டாரு. எனக்கு பதிலா மிமிக்ரி பண்ணிட்டாருன்னு எச்.ராஜா போல சொல்றது தான் தலைப்பாய் இருக்கிறதில்லையா அதை கிண்டல் செய்யும் பாணியாக இருந்தது விஜய் சேதுபதி கிண்டல்.

அப்புறம் பொறுமையாக தெரிவித்த விஜய் சேதுபதி, என் மூஞ்சி அதிக படங்களிலே தெரிஞ்சுகிட்டே இருக்குல, அதனால நான் ஒழுங்கா வருமான வரி கட்டுகிறேனா, கடன், ஆதாயம் கணக்கு எல்லாம் சரியா எழுதிருக்கேனா என பாக்க வந்தாங்க. எனக்கு இப்பதான் வருமானவரித் துறை இருப்பது தெரியும். நான் எப்போதும் வருமானம் வருவதற்கு முன்னதாகவே வருமான வரியை கட்டி வருகின்றேன். அதை என் கணக்காய்வாளர் கோப்பு பதிகை செய்யவில்லை. திடீர்ன்னு கோப்பு பதிகை செய்திருக்கிறார். இதனால் வருமான வரிச் சோதனைன்னு வதந்தி கிளம்பிருச்சு. என்றார். 

   -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,926.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.