Show all

விசாலை மிரட்டிய ஆடை படத்தின் சுவரொட்டி

21,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  அதோ அந்த பறவை போல படத்தை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடை’ படத்தின் சுவரொட்டியைப்  பார்த்து விசால் மிரண்டிருக்கிறார். 

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அதோ அந்த பறவை போல’. கதை தலைவிக்கு  முதன்மைத்துவம்  உள்ள இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். இப்படம் இறுதிகட்டத்தில் உள்ளது. இதையடுத்து மீண்டும் கதை தலைவிக்கு  முதன்மைத்துவம்  உள்ள படத்தில் நடிக்கிறார் அமலாபால்.

‘ஆடை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘மேயாதமான்’ புகழ் ரத்னகுமார் இயக்குகிறார். இப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டி நடிகர் ராணாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் நேற்று வெளியிட்டார்கள். வித்தியாசமான தோற்றத்தில் வெளியான இந்த சுவரொட்டி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

தற்போது விசால் இந்தச் சுவரொட்டியைப் பார்த்து தைரியமான அமலாபாலைப் பாராட்டுகிறேன். சிறப்பானமுதல் பார்வை சுவரொட்டி என  படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,902.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.