Show all

விஜய் நீலங்கரை வாக்குச்சாவடியில் அதிகாலையிலேயே வாக்களித்தார்! சர்கார் படத்திற்குப்பிறகு விஜய் வாக்களிப்பு கவனிக்கப்படுகிறது

சர்கார் படத்திற்குப்பிறகு விஜய் வாக்களிப்பு சிறப்புக் கவனம் பெறும்நிலையில்- நடப்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் அதிகாலையில் முதல் ஆளாக நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை புரிந்தார். 

07,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: அமெரிக்காவில் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் உயரதிகாரியான சுந்தர் (விஜய்), செல்லும் இடமெல்லாம் தன் அறிவாற்றலால் நிறுவனங்களை வளைத்துப் போடுகிறார். இதனால் பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் இவரைப் பார்த்து பயந்து ஓடுகின்றனர். 

இந்நிலையில் இந்தியா வருகிறார் சுந்தர். இங்கே எந்த நிறுவனத்தை அவர் குறி வைத்துள்ளாரோ என அனைவரும் பீதியில் இருக்க, தனது மக்களாட்சிக் கடமையை, அதாங்க ஓட்டுபோடுவதற்காக தமிழ்நாடு வந்திருப்பதாகக் கூறி அதிர வைக்கிறார்.

ஆனால், பெரு மூளைக்காரனான சுந்தரையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள் நம்மூர் அரசியல்வாதிகள். ஆம், அவரது ஓட்டை வேறு யாரோ ஒருவர் போட்டுவிட, அதிர்ச்சி ஆகிறார் சுந்தர். தேர்தலை களைவு செய்யக் கோரி, அதில் வெற்றியும் பெறுகிறார். இது விஜய் நடித்திருந்த சர்கார் படத்தின் கதை.

அந்தப் படத்தில் ஓட்டின் மதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விஜய்- ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க வருவது சிறப்புக் கவனம் பெற்று வருகிறது. போன முறை சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பிற்கு அவர் மிதிவண்டியில் வந்தது இணையத்தில் தீயாகப்பரவியது.

நடப்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் அதிகாலையில் முதல் ஆளாக நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை புரிந்தார். 

தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மாநிலம் முழுக்க 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. அதிகாலையில் இருந்து மக்கள் ஆர்வமாக நின்று வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 

இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று அதிகாலையிலேயே வாக்களிக்க நீலாங்கரைக்கு வந்தார். நீலாங்கரையில் நடிகர் விஜய்க்கு வாக்கு உள்ளது. அதிகாலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் சரியாக 7 மணிக்கு விஜய் அங்கே சொகுசுஉந்தில் வந்தார். அவருடன் அவரின் பாதுகாவலர்களும் வந்தனர். விஜய் வந்ததும் அங்கே அவரின் கொண்டாடிகள் பலர் கூட்டமாக குவிந்தனர். இதனால் விஜயின் சொகுசுஉந்து நகர்வதில் சிக்கல் ஏற்பட்டது. சொகுசுஉந்து ஒரே இடத்தில் சில நிமிடங்கள் முடங்கியது. 

இதனால் அங்கு வந்த காவல்;துறையினர் கூட்டத்தை கலைத்தனர். பின்னர் அவர்கள் சொகுசுஉந்துக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இங்கே அதிக அளவில் இருந்தனர். கூட்டம் அவர் கருப்பு நிற மாஸ்க் அணிந்து இருந்தார். இங்கு விஜய் முதலில் வரிசையில் நின்று வாக்களிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அங்கு கூட்டம் அதிகமாகிவிட்டது. விஜய் கொண்டாடிகள் அதிக அளவில் அவரை பார்ப்பதற்காக கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் நடிகர் விஜயை வரிசையில் நிற்க வேண்டாம் என்று கூறினார்கள். இதனால் விஜய் நேராக உள்ளே சென்று வாக்களித்தார். 

முன்னதாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் மிதிவண்டியில் வந்து வாக்களித்தார். அப்போது விஜய் பெட்ரோல், டீசல் விலையை கண்டிக்கும் வகையில் மிதிவண்டியில் வந்ததாக கூறப்பட்டது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,164.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.