Show all

பவர் ஸ்டாரை திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா!

பவர்ஸ்டாரை மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா. அந்தப் பங்களாவில் பேய்களின் அட்டகாசம். அதிலிருந்து எப்படி மீளப் போகின்றார்கள் பவர்ஸ்டாரும் வனிதாவும்.

12,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: பவர்ஸ்டாரை மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா, அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், நகைச்சுவை கலந்து ஒரு படத்தை உருவாக்கி வருகிறார்கள். 

இப்படம் குறித்து கூறும் பவர்ஸ்டார் சீனிவாசன், ‘இப்படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களைக் கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகின்றேன். செமத்தியான பாடல்களுடன், இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக வடிவம் எடுக்கிறேன். இந்தப் படத்தோட தலைப்பில் வனிதாவுக்கு, வைரல் ஸ்டார் என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்’ என்றார்.

பவர் ஸ்டார் சீனிவாசனும் வனிதாவும் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் இணையாக நடிக்கும் படம் ‘பிக்கப்’.  இப்படத்தில் இவர்களுடன் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோசன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.