Show all

தமிழ்த் திரையுலக நகைச்சுவைக்கு நேர்ந்த சோகம்! நிகழ் கிழமையில் மூன்று நகைச்சுவை நடிகர்களை இழந்துள்ளோம்

24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார். இயக்குனர் விக்ரமனின் படங்களில் தவறாமல் நடித்து வந்தவர் கோவை செந்தில். படையப்பா, கோவா, இது நம்ம ஆளு, தமிழ் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார். அவருக்கு அகவை 74. அவரின் மரண செய்தி அறிந்து திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த செவ்வாய்க் கிழமை நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதனும், புதன் கிழமை வெள்ளை சுப்பையாவும் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தனர். ஒரே கிழமையில் 3 நகைச்சுவை நடிகர்கள் மரணம் அடைந்துள்ளது தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,905.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.