Show all

வியந்த பார்வையாளர்கள்! இன்றைய பாரதி கண்ணம்மா அத்தியாயத்தை எழுதியது, வழக்கமான கதையாளராக இருக்க வாய்ப்பேயில்லை

கண்ணம்மா என் மனைவி என்று வெண்பாவை மிரளவைத்தார்  பாரதி என்றால்- இருவரும் (பாரதியும் கண்ணம்மாவும்) சேர்ந்து இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து மகிழ்கின்றார் கண்ணம்மா- இன்றைய பாரதி கண்ணம்மா அத்தியாயத்தை எழுதியது, வழக்கமான கதையாளராக இருக்க வாய்ப்யேயில்லை என்று வியக்கின்றனர் பாரதி கண்ணம்மா தொடரின் பார்வையாளர்கள்.

13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கண்ணம்மா என் மனைவிதான், நீ இதுல தலையிடாத என வெண்பாவிடம் சொல்லும் பாரதி, இன்றைய பாரதி கண்ணம்மா தொடரில் பார்வையாளர்கள் எதிர்பார்த்திராத அசத்தல் காட்சியாக அமைந்ததுளூ விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா தொடர்.

ஹேமாவுக்கு கண்ணம்மா சாப்பாடு ஊட்டிவிடுவதை பார்க்கும் பாரதி, எதுவும் சொல்ல முடியாமல் நிற்க, ஹேமா பாரதியையும் சாப்பிட அழைக்கிறாள். பாரதி சாப்பிட மறுக்க கண்ணம்மாவும் பாரதியைச் சாப்பிட அழைக்கிறாள். அப்போது அங்கு வரும் வெண்பா, இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள். அப்போது கண்ணம்மா பாரதியை ஏங்க, என அன்பான கணவனை அழைப்பதுப்போல் அழைத்து, வெண்பாவை வரவேற்கச் சொல்கிறாள். வீட்டில் உள்ள மற்ற எல்லோரும் இதைப்பார்த்து நக்கலாகச் சிரிக்கிறார்கள். எதுவும் புரியாமல் குழப்பத்தில் இருக்கிறான் பாரதி.

அப்போது சௌந்தர்யா, வெண்பாவிடம் எதுக்கு வந்த என கேட்க, அவள் தயங்க, பாரதி வெண்பாவைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். பின்னர் ஹேமா பள்ளிக்குக் கிளம்புகிறாள். பின்னர் கண்ணம்மா ஹேமாவ அழைச்சிட்டு போகமாட்டேன், ஹேமா அவ அப்பா கூட இருக்கட்டும் என்கிறாள். மேலும், இதைக்கேட்டு எல்லோரும் மகிழ்ச்சி அடைய, நேரம் வரும் போது ஹேமாவ கூட்டிட்டு போயிடுவேன் என்கிறாள்.

அடுத்தாக, பாரதியிடம் பழசையெல்லாம் ஞாபகப்படுத்தி அவனை தூண்டிவிடுகிறாள் வெண்பா. பின்னர் பாரதி நடந்ததைச் சொல்ல, நம்பாமல் நீ மாறிட்ட என்கிறாள். அதற்கு உன்னோட எல்லை அவ்வளவு தான் என பாரதி சொல்ல, அவள உங்க வீட்டுக்கு நீ தான் வர சொன்னியா என கேட்கிறாள் வெண்பா. 

சினமாகும் பாரதி, அதிகமா பேசாத, நீயும் நானும் எப்பவும் ஒண்ணா சுத்துறமே, ஆனா இதப் பத்தி கண்ணம்மா ஒரு நாள் கூட என்கிட்ட கேட்டதில்ல, கட்டுன மனைவி அவளே என்னை எதுவும் கேக்காதப்போ நீ என்ன இவ்வளவு கேள்வி கேக்குற, உனக்கு யாரு அந்த உரிமையக் குடுத்தா என்கிறான். 

என் வாழ்க்கைய பத்தி யோசிக்காம உனக்காக இருந்தேன், ஆனா உனக்கு நான் இப்ப தேவையில்லை என வெண்பா சொல்ல, இத பத்தி பேச வேண்டாம் என்கிறான் பாரதி. கண்ணம்மா பத்தி பேசுன உனக்கு பிடிக்கல, அவ உன் மனசுக்குள்ள வந்துட்டா, உனக்கு துரோகம் பண்ணவளே மன்னிக்கிற பெரிய மனசு உன்கிட்ட இருக்கு என்கிறாள் வெண்பா. ஒன்னுமே நடக்காதபோது, நீ ஏன் பெரிசு பண்ற, கண்ணம்மா இந்த மாதிரி எல்லாம் நடந்துக்கிட்டது இல்ல, இது எனக்கும் கண்ணம்மாவுக்கும் இடையிலான சிக்கல் இத கேக்க யாருக்கும் உரிமையில்லை என்கிறான் பாரதி.

உடனே வெண்பா, நான் யாரோ தான், ஆனா அந்த கண்ணம்மா எவன் கூட போய் புள்ள பெத்துக்கிட்டாலும் உன் மனைவிதானே என சொல்ல, ஆமா கண்ணம்மா என் மனைவிதான் அதுக்கு என்ன இப்ப என கத்திச் சொல்கிறான் பாரதி. 

அதிர்ச்சியாகும் வெண்பாவிடம், நான் கட்டுன தாலி அவ கழுத்துல இருக்குற வரைக்கும் அவ என் மனைவிதான், சட்டமும் அத தான் சொல்லுது என சொல்ல, நீ இப்ப சொல்லுவேனு நினைச்சேன் என வெண்பா சொல்ல, அவ தப்பு செஞ்சதால் பிரிஞ்சு வாழ்றேன், ஆனா நடந்த எதையும் மாத்த முடியாது, அவள என்னைக்கும் நான் ஏத்துக்க மாட்டேன், ஆனா இது எங்களோட சிக்கல், இதுக்குல்ல மூணாவது மனுசன் வர்றத நான் விரும்பல என்கிறான் பாரதி. வெண்பா அதிர்ச்சியாக உனக்கு புரிஞ்சிடுச்சா என பாரதி கேட்க, அதான் செருப்பால் அடிச்ச மாதிரி சொல்லிட்டியே என கோபமாக கிளம்புகிறாள் வெண்பா.

அடுத்ததாக கண்ணம்மா தனது வீட்டில் அங்கு நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்து மகிழச்;சி அடைகிறாள். மேலும் எல்லா சிக்கலும் முடிஞ்சு, ஹேமாவும் லட்சுமியும் எங்கள அம்மா அப்பானு கூப்பிட்டா எவ்வளவு நல்லா இருக்கும் என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துகிறாள். அங்கு வரும் தானி ஓட்டுனர் குமார் என்ன விடையம் என கேட்க, மனசு நல்லா இருக்கு என்கிறாள்.

திங்கட் கிழமை பாரதி கண்ணம்மா அத்தியாயத்திற்கு உண்மையான கதையாளர் வந்து என்னென்ன செய்யப்போகின்றாரோ என்று பேசும் பாரதிகண்ணம்மா பார்வையாளர்கள், இப்படியே தொடர்ந்தால் கண்ணம்மா தொடரை நல்லமுறையில் முடித்து விடலாமே என்று தொடர- 

பக்கத்தில் ஆர்வக்கோளாறில், இந்தத் தொடரின் தெலுங்கு பதிப்பையும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நண்பர், தெலுங்கில் வெண்பா கதாபாத்திரத்திற்கும் பாரதி கதாபாத்திரத்திற்கும் ஒரு சோதனை குழாய் குழந்தை பிறந்த குளறுபடி ஓடிக் கொண்டிருக்கிறதே இதைவிட முன்னூறு அத்தியாயங்கள் கடந்து, என்று தெரிவித்து பாரதிகண்ணம்மா இப்போதெல்லாம் முடியவே முடியாது என்று பாரதி கண்ணம்மா குறித்த கருத்தாடலை முடித்து வைக்கிறார்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,052.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.