Show all

வெற்றி யாருக்கு! படங்களை வெளியிட்டு பொங்கலுக்கு வரிசை கட்டுவது போல், அரசியலுக்கு வரிசை கட்டும் திரை பிரபலங்கள்

14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கலைஞர் செயலலிதா இரண்டு பெரிய அரசியல் பிரபலங்கள் மறைவிற்கு பின் நடிகர்கள் பலருக்கும் அரசியல் ஆசை வந்துள்ளது.

இதில் முந்தியவர் கமல்ஹாசன். இவர் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டு தற்போது உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.

அடுத்தாற்போல் ரஜினிகாந்த் தற்போது 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற அமைப்பை தொடங்கி உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். இதே பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ இந்த அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறவுள்ளதாக சொல்லப் படுகிறது.

இந்த நிலையில் இன்று விசால் தனது ரசிகர் மன்றத்தை 'மக்கள் நல இயக்கம்' என்ற அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். 

விஜய் மக்கள் இயக்கம் என்ற ரசிகர் மன்றம் எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பொங்கலுக்கும், தீபாவளிக்கும் பல்வேறு நடிகர்களின் படங்கள் வரிசை கட்டும். நாமும் ஆர்வத்தோடு முதல்நாள், முதல் காட்சியைப் பார்ப்பதற்கு ஒரு நடிகரைத் தேர்வு செய்து வைத்திருப்போம்.

அந்த வகையாக நாடளுமன்றத் தேர்தலுக்கும், தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலுக்குமாக நான்கு நடிகர்கள் களத்தில் அணிவகுத்திருக்கிறார்கள். எந்த தலைவரின் அரசியல் போணியாகப் போகிறது. மக்கள் தீர்ப்புக்கு காத்திருக்கிறோம் ; காத்திருக்கிறார்கள்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,895.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.