Show all

வெஸ்ட் இண்டீஸ் வீரருடன் ஸ்ரேயா..! தீயாய் பரவும் நிழற்படம்

அமெரிக்காவில் நட்சத்திர உணவகத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோவும், நடிகை ஸ்ரேயாவும் இருந்த நிழற்படம் இணையதளத்தில் வெளியாகி பரவும் தீயானது. கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தபோது, அவருடன் நட்பாக பழக்கமானார், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ. ஸ்ரேயாவின் குடும்ப நண்பர்கள் பலர், அமெரிக்காவில் வசித்து வருவதால், ஆண்டுதோறும் அமெரிக்காவுக்குச் சென்று அவர்களை சந்தித்து மகிழ்வது ஸ்ரேயாவின் வழக்கம். அதன்படி அமெரிக்காவுக்குச் சென்ற அவர், அங்குள்ள ஒரு நட்சத்திர உணவகத்தில்; தங்கியுள்ளார். அதே உணவகத்தில்; அந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோவும் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், உணவகத்தில்; இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இயல்பான இந்தச் சந்திப்பின்போது, எடுக்கப்பட்ட ஒரு நிழற்படம் வெளியானது. இது குறித்து வதந்திகள் பரவின. முன்னதாக, மும்பையில் தனது குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவரை ஸ்ரேயாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாகவும், இதை ஸ்ரேயாவும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.