Show all

ரோசனை ஜீனியஸ் படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும், கதைத்தலைவராகவும் அறிமுகம் செய்கிறார் இயக்குனர் சுசீந்திரன்

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குனர் சுசீந்திரன் தனது ஜீனியஸ் திரைப்படம் குறித்து கூறிதாவது: நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. நான் இந்த கதையையும் , கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒற்றை வரியில் கூறிவந்தேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல ஆண்டுகளாக யோசித்து வந்தேன். அது கதையாக மாறிய பின்பு ஜீனியஸ் கதையை விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை.

கடைசியாக இந்த கதை அறிமுக கதைத்தலைவன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோசனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். 

இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்குவில் வெளியிட முடிவு செய்துள்ளோம். ரோசனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும், கதைத்தலைவராகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்று பேசினார்.

இந்தப் படத்தின் கதைத்தலைவரும், தயாரிப்பாளருமாகிய ரோசன் ஜீனியஸ் திரைப்படம் குறித்து கூறிதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் முதலில் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். ஒரு படத்தில் நானும் என்னுடைய நண்பனும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதன் பின்னர் திரையுலகம் வேண்டாம் என்று முடிவு செய்து சொந்த தொழிலை பார்க்க சென்றுவிட்டேன். அதன் பின்னர் திரைப்பட ஆசை இல்லாமல் தான் இருந்தேன். திருமணத்துக்கு பின்னர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பின்னர், நீங்கள் ஏன் திரைப்படத்தில் நடிக்கும் ஆசையை கைவிட்டுவிட்டீர்கள்? என்று சுசீந்திரன் கேட்டார். அப்போது தொடங்கிய ஆர்வம் தான் இன்று சுசீந்தரன் அவர்கள் இயக்கத்தில் ஜீனியஸ் திரைப்படத்தில் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. ஜீனியஸ் போன்ற நல்ல படைப்பின் மூலமாக என்னை திரையுலகிற்கும், மக்களுக்கும் அறிமுகம் செய்த இயக்குநர் சுசீந்த்ரனுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,883.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.