Show all

ரித்விகாவிற்கு வாய்ப்பு! எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  காமராசர் வாழ்க்கை வரலாற்றை காமராசர் பெயரில் திரைப்படமாக இயக்கியவர் அ.பாலகிருஷ்ணன். அடுத்து எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுப்  படத்தை தயாரித்து இயக்குகிறார். 

இப்படத்தின் விளம்பரக் காணொளி நேற்று வெளியானது. இதுபற்றி இயக்குனர் கூறியது: ஆணையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். வறுமையால் அவரது கல்வி தடைபட்டதையடுத்து நாடக கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது.

எம்ஜிஆரின் சிறுஅகவை கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு நடத்தி அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு, சிறுவன் எம்ஜிஆரின் வேடத்தில் நடிக்கிறான். எம்ஜிஆரை போன்றே தோற்றம் கொண்ட நடிகர் சதீஷ்குமார், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன், சக்ரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், எம்ஜிஆர் உயிர் தொண்டனாக வையாபுரி நடிக்கின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, செயலலிதா ஆகியோர் கதாபாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. விரைவில் தொடங்கவிருக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் எம்ஜிஆர் மனைவி ஜானகியாக ரித்விகா நடிக்க உள்ளார். ஏ.எம்.எட்வின் ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதை, வசனத்தை செம்பூர் ஜெயராஜ் எழுதுகிறார். எஸ்.பி.அகமதி படத் தொகுப்பை மேற்கொள்கிறார். இவ்வாறு இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறினார்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,900.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.