Show all

அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' விரைவில் திரைக்கு வருகிறது

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காசியப், ராசிகண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் தணிக்கை குழு பொதுமக்களுக்கும் மூத்தோர்களுக்குமானது என சான்றிதழ் வழங்கியுள்ளது.

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் திகில், அதிரடிப் படமாக உருவாக்கப் பட்டுள்ள  'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வாவுக்கான கதைத்தலைவியாக ராசி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

மேலும் வடக்கத்திய நடிகர் அனுராக் காசியப் பகைவனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும்; நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கி விட்ட நிலையில், விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,883.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.