Show all

மேநாளில் கலைகட்டப் போகிறது சின்னத்திரை! ஒரே நேரத்தில் தலைவன், படைத்தலைவன் படங்கள்

அஜித் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் நேருக்கு நேர் பனிரெண்டு முறை பெரியதிரையில் மோதியுள்ளன. அதாவது ஒரே நாளில் படம் வெளியீடு ஆகி. இதே மாதிரியான முன்னெடுப்பு சின்னத்திரையில் மேநாளில் கலக்கப்படவுள்ளது. 

14,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: நடிகர் அஜித்தை தல என்றும், நடிகர் விஜய்யை தளபதி என்றும், கொண்டாடி வருகின்றனர் அவர்களின் கொண்டாடிகள். நாம் நம்முடைய தளத்தில் இருந்து, தல என்கிற பேச்சு வழக்கை தலைவன் என்று இலக்கிய வழக்கிலும், தளபதி என்கிற சம்ஸ்கிருதச் சொல்லைப் படைத்தலைவன் என்றும் தமிழ்ப் படுத்தியுள்ளோம்.

அஜித் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் நேருக்கு நேர் பனிரெண்டு முறை திரையில் மோதியுள்ளன. அதாவது ஒரே நாளில் படம் வெளியீடு ஆகி. 

தற்போது இவ்விரு நடிகர்களுமே தனித்தனியாகவே தத்தம் படங்களை வெளியீடு செய்து வருகின்றனர். இதற்கிடையில் வருகிற மேநாளை முன்னிட்டு மீண்டும் ஒரு விஜய் - அஜித் மோதல் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மோதல் வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரை வழியாக நடக்க உள்ளது. 

மேநாளை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது. மறுமுனையில் ஜீ தமிழ் காட்சிமடையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை, மேநாள் சிறப்பு திரைப்படமாகவும், அதே சமயம் அஜித்தின் பிறந்தநாள் சிறப்பு திரைப்படமாகவும் ஒளிபரப்ப உள்ளது. 

சன் காட்சிமடையில் மாட்ஸர் திரைப்படமும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வலிமை திரைப்படமும் ஒரே நேரத்தில், அதாவது மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது.

ஜீ தமிழ் காட்சிமடையில் ஒளிபரப்பாகவுள்ள அஜித்தின் வலிமை திரைப்படத்தோடு நேரடியாக மோத வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் சன் காட்சிமடை மாஸ்டர் திரைப்படத்தை களமிறக்குகிறது என்பதில் ஐயமே வேண்டாம். ஒப்பீட்டளவில் வலிமை திரைப்படத்தை விட மாஸ்டர் திரைப்படம் நல்ல இலக்கு அளவீட்டுப் புள்ளியைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

ஏனெனில் மாஸ்டர் படத்தில் விஜய் மட்டுமல்ல, விஜய் சேதுபதியும் நடித்து உள்ளார். இருப்பினும் அண்மையில் வெளியான திரைப்படம் என்கிற கோணத்தில் வலிமை திரைப்படமும் நல்ல இலக்கு அளவீட்டுப் புள்ளியை வழங்கலாம். எது எப்படியோ, மேநாளன்று அஜித் மற்றும் விஜய் கொண்டாடிகளின் மகிழ்ச்சிக்கான இலக்கு அளவீட்டுப் புள்ளியைக் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,231.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.