Show all

மாதவன், அனுஷ்கா இணையும் வசனமில்லாத படம் சைலன்ட்

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் அதிரடி படமான சைலன்ட் என தலைப்பிட்டுள்ள வசனங்களே இல்லாத பேசும் படமாக உருவாகிறது. (அப்புறம் எதற்கு வெறுமனே மூன்று மொழிகள் என்று வரையறை? உலக மொழிகள் எல்லாவற்றிலும் வெளியிட வேண்டியது தானே? வசனம்தான் இல்லையே.)

கதை தலைவிகளுக்கு முதன்மைத்துவம் உள்ள படங்களில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகமதி ஆகிய படங்கள் அனுஷ்காவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன.

இதனையடுத்து பல கதைகள் கேட்டும் அவருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் கதைத் தலைவனுக்கு இணையான வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புள்ள சைலன்ட் படம் இவருக்குப் பிடித்துள்ளதாம்.

இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். கோணா வெங்கட் வசனம் எழுதி தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,893.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.