Show all

தமிழ்த் திரையுலகிற்கு வரவிருக்கிற ஜான்வி கபூர்! வேறு யாருமல்ல; தமிழ்நடிகை சிரிதேவியின் மூத்த மகள்தான்

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் துணைவன் படத்தில் குழந்தை நடிகையாக முருகன் வேடத்தில் அறிமுகமான, தமிழ்நடிகை சிரிதேவிக்கு, ஹிந்தி திரையுலகின் மீது அத்துனை வெறி. மூக்கையெல்லாம் அறுத்துக் கொண்டு ஹிந்திப்;;; பெண்ணாகவே மாறிவிட்டார். இப்போது அவர் மூத்த மகள் தமிழ்திரையுலகை நோக்கி வருகிறாராம்.

ஆம்! தடக் என்ற ஹிந்திப் படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் சிரிதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தடக் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். இந்தப்படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. ஜான்வி நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. பல இயக்குனர்கள் ஜான்வியை அணுகி கதை சொல்லி வருகிறார்கள்.

அடுத்ததாக கரன் ஜோகர் இயக்கும் புதிய ஹிந்திப் படத்தில் நடிக்க ஜான்வி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா கதைத்தலைவனாக நடிக்கும் தெலுங்கு படமொன்றில், அவருக்கு இணையாக நடிக்கவும் ஜான்வியிடம் பேசி வருகிறார்கள். 

தமிழ்ப் படத்தில் நடிக்கவும் ஜான்விக்கு வாய்ப்பு வந்துள்ளது. இரண்டு இயக்குனர்கள் அவரை அணுகி கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்வி தரப்பில் கூறும்போது, தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் ஜான்விக்கு கதை சொல்லி உள்ளனர். தென்னிந்திய மொழிகளில் நடிக்கவும் ஜான்விக்கு விருப்பம் உள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வரும் என்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,922.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.