Show all

யுஏ சான்றுடன் தணிக்கை முடிந்து ‘மெர்சல்’ தீபாவளிக்கு வெளியீடு

இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜய்யின் தீபாவளிப் படமான மெர்சல் தணிக்கை நேற்று முடிந்தது. யு சான்று கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், இந்தப் படத்துக்கு யு ஏ சான்று கிடைத்துள்ளது. விஜய் - சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மெர்சல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

ரூ 130 கோடி செலவுத்திட்டத்தில் உருவாக்கப் பட்டுள்ளதாக சொல்லப்படும் மெர்சல் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் சொந்தமாகவே வெளியிட முடிவு செய்துள்ளது. படம் வெளியீட்டுக்கு அணியமான நிலையில் தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். தீபாவளி நாளான 01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119. (18.10.2017) அன்று படம் வெளியாகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.