Show all

வடக்கை நோக்கிய பயணத்தில் அமலாபால்!

முதல்முறையாக வடக்கத்திய திரையுலகில் களமிறங்கி இருக்கிறார் அமலாபால். இவரது நடிப்பில் புதிய இணைய வெளியீடு ஒன்று தயாராகி வெளிவரவுள்ளது.

13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: மைனா திரைப்படத்தின் மூலம் பேரறிமுகமாகி தமிழ் திரைப்படக் கொண்டாடிகளுக்கு அறிமுகமான நடிகை அமலாபால். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரைப்படத்தின் முன்னணி கதைத்தலைவிகளில் ஒருவராக உருவெடுத்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னகத்தில் முன்னணி நடிகர்களுக்கு கதைத்தலைவியாக இணைந்து நடித்து தென்னகத் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தார் அமலாபால்.

தமிழில் அமலாபால் நடிப்பில் திகில் படங்களாக தயாராகியுள்ள 'அதோ அந்த பறவை போல' மற்றும் 'கடாவர்' ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்கு காத்திருக்கின்றன. 

இதனைதொடர்ந்து முதல்முறையாக வடக்கத்திய திரையுலகில் களமிறங்கி இருக்கிறார் அமலாபால். இவரது நடிப்பில் புதிய இணையத்தொடர் ஒன்று தயாராகி வெளிவரவுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வடக்கத்திய திரையுலகில் போரறிமுக நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி உருவாகியுள்ள ரஞ்சிஷ் ஹி சஹி இணையத் தொடரில் பர்வீன் பாபி என்ற கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.

மகேஷ் பட் உருவாக்கியுள்ள இந்த இணையத்தொடரில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் பல முன்னணி கதாபாத்திரங்கள் இதில் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த இணையத் தொடரை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நேரடியாக இந்த இணையத்தொடர் எண்ணிமத் தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,111. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.