Show all

இரம்யா பாண்டியனின் ஒப்பீடு! பிக்பாஸ், குக்வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பிடித்தது குக்வித் கோமாளிதானாம்

பட வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற இலக்கில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம் நடிகை இரம்யா பாண்டியன். 

21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை இரம்யா பாண்டியன். சின்னத்திரையில் விஜய் காட்சிமடையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரறிமுகமானார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது கொண்டாடிகள் வட்டம் பெரிதானதாகவே தெரியவருகிறது. தற்போது சில படங்களில் வேலையாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் அண்மைப் பேட்டி ஒன்றில் பிக்பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என கேட்கப்பட்டது. அதற்கு விடையளித்துள்ள இரம்யா பாண்டியன், 'பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால், அந்த நிகழ்ச்சியால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அதைவிட குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிறப்பு. எனக்கு மிகவும் பிடிக்கும். நகைச்சுவையுடன் கொண்டாட்டமாக இருக்கும். கொண்டாடிகளிடம் இருந்து எந்தவித வெறுப்பும் வராது' என்று  கூறியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,029.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.