Show all

சிறந்த படமாக சூரரைப் போற்று தேர்வு! இந்திய ஒன்றிய அளவிலான அறுபத்தி எட்டாவது திரைப்பட விருதுகள் அறிவிப்பில்

அந்த வகையில், இந்திய ஒன்றிய அளவிலான திரைப்பட விருதுகளுக்கான இறுதிப்பட்டியலை நிறைவுசெய்து, தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் தேர்வுக் குழுவினர் வழங்கி உள்ளனர்.

06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆங்கில ஆண்டு 2020க்கான 68வது இந்திய ஒன்றிய அளவிலான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம் எவை என நடுவர்களால் தேர்வுசெய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. கொரேனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்படாத விருதுகள் அதற்கடுத்த ஆண்டுகளில் அறிவிக்கப்படுகின்றன. 

அந்த வகையில், இந்திய ஒன்றிய அளவிலான திரைப்பட விருதுகளுக்கான இறுதிப்பட்டியலை நிறைவுசெய்து, தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் தேர்வுக் குழுவினர் வழங்கி உள்ளனர்.

1. சிறந்த படமாக சூரரைப் போற்று தேர்வாகியுள்ளது.
2. தமிழில் சிறந்த படம் - சிவரஞ்சனியும் சில பெண்களும்
3. சிறந்த நடிகர்- சூர்யா, சூரரைப் போற்று படத்திற்கு 
அஜய் தேவ்கன் தான்காஜி படத்திற்கு
4. சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்திற்கு
5. சிறந்த இயக்குநர் - அய்யப்பனும் கோஷியும் படத்திற்கு இயக்குநர் சச்சி
6. சிறந்த அறிமுக இயக்குநர் - மடோன் அஸ்வின், மண்டேலா படத்திற்கு
7. சிறந்த துணை நடிகர் - பிஜு மேனன்
8. சிறந்த துணை நடிகை - லக்ஷ்மிபிரியா சந்திரமௌலி, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு
9. சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் (சூரரைப் போற்று), தமன் (அலவை குந்தபுரம்- தெலுங்கு)
10. சிறந்த திரைக்கதை - சூரரைப் போற்று (சுதாகொங்கரா மற்றும் சாலினிஉசாநாயர்)
11. சிறந்த வசனம் - மடோன் அஸ்வின் (மண்டேலா)
12. சிறந்த படத்தொகுப்பாளர் - சிறீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
13. சிறந்த பின்னணி இசைப் பாடகி - நஞ்சம்மா (ஐயப்பனும் கோஷியும்-மலையாளம்)
14. சிறந்த பின்னணி இசைப் பாடகர் - ராகுல் தேஸ்பண்டே
15. இந்திரா காந்தி விருது - மண்டேலா
16. திரைப்படத்திற்கு உகந்த மாநிலம்- மத்திய பிரதேசம்
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,317.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.