Show all

எம்ஜிஆரை வினையாலணை கதாபாத்திரமாக மாற்றி உருவாக்கப்படவுள்ளது! கல்கியின் பொன்னியின் செல்வன்

எம்ஜிஆரின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அஜய் பிரதீப் என்பவர் இயக்கத்தில் எம்ஜிஆர் நடிப்பில் உருவாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

05,தை,தமிழ்த்தொடராண்டு-5123: எழுத்தாளர் கல்கி எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் உலகின் செம்மை நாவலாக பல ஆண்டுகளாக கோலோச்சி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தக சந்தையின் போதும் அதிகமாக விற்கும் புத்தகங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வன் நாவல் கண்டிப்பாக முன்னிலையில் இருக்கும்.

இந்த நாவலை எம்ஜிஆர் படமாக்க வேண்டும் என்று முயன்று, அதற்காக இயக்குனர் மகேந்திரனை திரைக்கதை எழுத வைத்தார். ஆனால் பல காரணங்களால் அது நடக்கவில்லை. பின்னர் தன் தயாரிப்பில் கமல் நடிப்பில் அதை உருவாக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அதுவும் கைகூடவில்லை. அதன் பின்னர் இயக்குனர் மணிரத்னம் பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார்.
அவரைத் தவிர இரஜினியின் இளையமகள் பொன்னியின் செல்வனை இணையத் தொடராக தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது எம்.ஜி.ஆரை வினையாலணை (அனிமேசன்) கதாபாத்திரமாக மாற்றி பொன்னியின் செல்வனை திரைப்படமாகவும், இணையத் தொடராகவும் உருவாக்க இருக்கிறார்கள்.

இளையராசா இசையமைக்க இருக்கும் இப்படத்தை அஜய் பிரதீப் இயக்க இருக்கிறார். பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முதன்மை வேடங்களில் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும்; தகவல் வெளியாகியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,132.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.