Show all

ஆடை படத்திற்காக அடுத்த சில பட வாய்ப்பை தவிர்த்த அமலாபால்

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கதைதலைவிக்கு முதன்மைத்துவம் உள்ள படத்தில் நடித்து வரும் அமலாபால், தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்காக பல பட வாய்ப்பை தவிர்த்திருக்கிறார். 

திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற 'மேயாத மான்' படத்தை இயக்கியவர் ரத்ன குமார். தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார். இதில் அமலா பால் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலாபால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இந்தப் படம், உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது. ஆடை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதைபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,881.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.