Show all

இப்படை வெல்லும், படத்தில் ராதிக பேருந்து ஓட்டுநராம்

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் ‘இப்படை வெல்லும்படத்தில், அவருக்கு இணையாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் உதயநிதியின் அம்மாவாக நடித்துள்ள ராதிகா, பேருந்து ஓட்டுநராக நடித்துள்ளாராம். இதற்காக, பேருந்து ஓட்டி பயிற்சி பெற்ற பிறகு நடித்துள்ளார் ராதிகா சரத்குமார்.

தூங்கா நகரம், அரிமா நம்பி ஆகிய படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்குகிறார். டி.இமான் இசை அமைத்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.