Show all

காலப்பறவை ம.ஸ்டாலின்பெலிக்ஸ்! முன்னோர் நூலகத்தில் இன்று நான் படித்து நெகிழும் தெய்வத்திரு

03,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நான்காண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாளில், கடவுளில் கூட்டியக்கச் சுழியமாக காலமானர், காலப்பறவை ம.ஸ்டாலின்பெலிக்ஸ்

கனவுகளோடு சுற்றிய 
இளைஞர்களைக்
கவிதைகளோடு
சுற்றவைக்க
காலப் பறவை என்ற 
வலைதளத்தை தொடங்கியவர்
ம.ஸ்டாலின் பெலிக்ஸ்.
நான்காண்டுகளுக்கு முன்பு
இன்றைய நாளில்
கடவுளில் கூட்டியக்கச் சுழியமாக
காலமானார் ம.ஸ்டாலின் பெலிக்ஸ்.
தெய்வத்திரு ம.ஸ்டாலின் பெலிக்ஸ்
அவர்களே!
ஒரு தேடலில் 
உங்கள் தம்பி எட்வின் 
எனக்கு நண்பரானார்.
அவர் அடிக்கடி 
என்னிடம் பகிர்ந்த நினைவுகள்
காலப்பறவை ம.ஸ்டாலின்பெலிக்ஸ்.
இன்று உங்கள் தம்பி எட்வின்-
முன்னோர் நூலகத்தில் 
உஙகள் தரவுகளை தேடிப்
படித்திருக்கும் வேளையில்-
நானும் அவருக்கு, 
நெகிழ்வுத் துணையாய் இருப்பதை
இந்தப் பதிவில்
வெளிப்படுத்துகிறேன்.
வணக்கம் தெய்வத்திரு ம.ஸ்டாலின்பெலிக்ஸ்!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,525.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.