Show all

தம்சொந்தமொழியைக் கொண்டாடுவதில்! எப்போதும், உலகின் முதல் இடத்தில், தமிழர் அமைவதன் காரணம் என்ன?

தம்சொந்தமொழியைக் கொண்டாடுவதில்! எப்போதும், உலகின் முதல் இடத்தில், தமிழர் அமைவதன் காரணம் என்ன? என்ற வினாவிற்கு அடிப்படையான இரண்டு முதன்மைக் காரணங்களை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தம்சொந்தமொழியைக் கொண்டாடுவதில், எப்போதும் தமிழர் உலகின் முதல் இடத்தில் அமைவதன் காரணம் என்ன? இது உலகின் அத்தனை மொழி பேசுவோருக்கும் எழுகிற கேள்வியாக இருந்து வருகிறது.

தம்சொந்தமொழியைக் கொண்டாடும் தமிழ்மக்களின் இந்தப்பாடு- கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக காங்கிரசிலும், பாஜகவிலும் இருந்து, ஒன்றிய ஆட்சியில் ஈடுபட்டுவருகிற, வடஇந்திய ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட தலைவர்களுக்குக் கேள்வியாக மட்டும் இல்லாமல், தலைக்குடைச்சலாகவும் இருந்து வருகிறது.

உலக மொழிகளுக்கு எல்லாம் வேறுவேறு மூலமொழிகள் உண்டு. நாம் முன்னே சொன்ன தலைக்குடைச்சல்காரர்களின் மொழி ஹிந்திக்கு மூலமொழி ஒன்றல்ல பல. ஹிந்தி ஒரு கலவை மொழி. சமஸ்கிருதம், உருது, பாரசீகம் அராபி ஆகிய மொழிகளின் கலவை மொழி ஹிந்;தியாகும். 

உலகமொழியாக ஆதிக்கம் செலுத்திவருகிற ஆங்கிலத்திற்கும் மூலமொழி வேறுசில மொழிகள்;தாம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னம் செருமானிய குடியேறிகளான ஆங்கிலோ-சாக்சன் இனத்தவரால் பிரித்தானியாவின் கிழக்குக் கரைக்குக் கொண்டுவரப்பட்ட, பண்டைய ஆங்கிலம் எனப்பட்ட பல்வேறு தொடர்புடைய மொழிவழக்குகளில் இருந்து பிறந்ததாகும் ஆங்கிலமொழி. 

இன்றைய ஆங்கில மொழியில் கலக்காத மொழிகளே இல்லை என்கிற அளவிற்கு அனைத்து மொழிச்சொற்களையும் உள்வாங்கிக் கொண்டு பேரளவான இடுகுறிச்சொற்களின் தொகுப்பு மொழியாக ஆங்கிலம் விளங்கி வருகிறது. 

ஆக உலகமொழிகள் அனைத்தும், எல்லையில்லாமல் வேறுவேறு மொழிச்சொற்களை இடுகுறியாக ஏற்றுக்கொண்டதன் விளைவாக, வேறுவேறு மொழிகளாகப் புதிது புதிதாகப் பிறந்தவைகளே. 

ஆக, உலக மொழிகள் வேறுவேறாக காணப்படுவதற்குக் காரணம்- அந்தந்த மொழிகள் கொண்டிருக்கும் மொழிகள் மற்றும் மொழிச்சொற்களின்  எண்ணிக்கை மாற்றத்தின் அளவு பற்றியது ஆகும். உலக மொழிகள் அனைத்திற்கும் காரணமான மூலமொழிகள் இவையென்று சிலவற்றை நிறுவுவதற்கு அந்த மொழிகள் எதுவும் இன்று வழக்கில் இல்லாமல் போய்விட்டன.

ஆனால் தமிழ்- உலக மொழிகளின் ஐம்பது விழுக்காட்டு மொழிகளுக்கு மூலமொழியாகவும் இருக்கிறது. தனிமொழியாகவும் சீரும் சிறப்புமாக தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாக இயங்கியும் வருகிறது. 

இன்றைய தமிழை இயற்றமிழ் என்று கொண்டால், அதன் மூலமொழி வாஆஆஆஆ போஓஓஓஓ என்று நீட்டி ஒலிக்கப்பட்ட இசைத்தமிழேயன்றி வேறு ஒரு மொழி அல்ல. அந்த இசைத்தமிழின் மூலமொழி ஓடல் ஆடல் விளையாட்டு என்னும் உடலசைவு மொழியான நாடகத்தமிழேயன்றி வேறு ஒரு மொழி அல்ல. 

முதலாவதான உடலசைவு மொழியில், இரண்டாவதான நீட்டியொலித்த இசைமொழியில், இருந்து முன்னெடுக்க பட்டது மூன்றாவதான இயற்றமிழ் என்றவகைமையில் முதலாவது நாடகத்தமிழ், இரண்டாவது இசைத்தமிழ், மூன்றாவது இயற்றமிழ் என்கிற முத்தமிழ் என்பதாக நடப்பு மொழியும் தமிழ்- மூலமொழியும் தமிழ்- என்று உலக மொழிகளில் தமிழ் மட்டுமே நெடிய தொடர் வரலாறு கொண்டிருக்கிறது.

பாலில் மோர் கலந்தால் தயிராகி விடுவதைப் போல தமிழில் அயல்மொழிச் சொல்லைக் கலந்த குழுவினர் தெலுங்கு, கன்னடம், துளு, மிக மிக அண்மையில் மலையாளம் என்று பிரிந்து சென்று விட்டனர். தமிழில் பிறமொழியைக் கலக்காத குழுவினர் மட்டுமே பல பல அயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழர்களாக தமிழைக் காத்து வருகின்றனர். 

தமிழைக் கொண்டாடுகிறவர்கள் மட்டுமே தமிழைக் காத்து வருகிற காரணம் பற்றி, தமிழைக் கொண்டாடுவோர்களும் தமிழும் பல பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கின்ற காரணம் பற்றி, உலகில் தமிழர் மட்டுமே- தம்சொந்தமொழியைக் கொண்டாடுவதில், எப்போதும் உலகின் முதல் இடத்தில் அமைந்து நிற்கின்றனர்.

இரண்;;டாவதாக- உலகினர் அனைவரும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றங்கரை தேடி அலைந்த நிலையில், தமிழர் மட்டுமே வாழ்ந்த மண் எதுவென்று பாராது நிலந்திருத்தி மலையில் வாழ்வதை குறிஞ்சி என்றும், காட்டில் வாழ்வதை முல்லை என்றும், ஆற்றங்கரையோரம் வாழ்வதை மருதம் என்றும், கடற்கரையொட்டி வாழ்வதை நெய்தல் என்றும், சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களுக்கான பருவமான இளவேனில், முதுவேனில் காலத்தில் குறிஞ்சியும் முல்லையும் வறண்ட போதுங்கூட அந்தக் காலத்து குறிஞ்சி மற்றும் முல்லை வாழ்க்கையை பாலை நில வாழ்க்கை என்று கொண்டாடியவர்கள் ஆவார்கள். இந்தச் செய்தியை இந்தப் புறநானுற்றுப் பாடல் உணர்த்துவதை உய்த்துணரலாம்.
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை  வாழிய நிலனே
புறநானூறு-187. பாடியவர்: ஒளவையார்.

ஆக- அயல்இனம், அயல்மொழி, அயல்இயல் என்று எதுவும் இருப்பது அறியாது ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஆண்டுகளாக தமிழர்தம் அறிவாக இருந்தது அவர்கள் எண்ணமொழியான தமிழே என்கிற காரணம் பற்றி தமிழர்களால் தமிழ் விரும்பிக் கொண்டாடப்பட்டு வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,460.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.