Show all

எந்தெந்த புத்தகங்கள் நம் மனநிலையை முற்றிலுமாக மாற்றிவிடும்?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, எந்தெந்த புத்தகங்கள் நம் மனநிலையை முற்றிலுமாக மாற்றிவிடும்? என்ற வினாவிற்கு விடையாக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை ஆகும்.

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்பது ஐரோப்பிய இயல்அறிவும் தமிழ் இயல்கணக்கும் நிறுவிய உண்மையாகும்.

ஒவ்வொருவருக்கும் அவர் அமைந்த எண்ணிக்கையால் ஒரு அடிப்படை இயல்பு இருக்கும். அந்த இயல்பே அவரின் மனநிலை ஆகும். 

உங்கள் இயல்பு சார்ந்த புத்தகங்கள் உங்கள் மனவலிமையைக் கூட்டும். உங்களுக்கு இயல்பு இல்லாத புத்தகங்கள் உங்களைச் சோர்வடையச் செய்யும்.

ஒரு நூலகத்திற்குள் சென்று சிலமணிநேரப்படிப்பில் இருந்துவிட்டு வெளியே வருகிற அனைவருமே துள்ளல் மனநிலையில் வெளி வருவதற்கு மிகுந்த வாய்ப்பு உண்டு. அங்கே அவர்கள் தங்கள் இயல்புக்கு தீனியான புத்தகத்தைத் தேர்வு செய்து படித்திருக்க முடியும்.

நமது கல்வித்திட்டத்தில் இயல்புக்கான படிப்பு என்பதான தேர்வுமுறை இருக்கவில்லை. நமது கல்வித்திட்டம் முன்னெடுக்கும் இயல்புக்குப் பொருந்தியவர்கள் ஈடுபாட்டோடு கற்று வெற்றி பெறுகிறார்கள்.

மாறுபட்டவர்கள் ஏனோதானே என்று படித்து, அரைகுறையான வெற்றியோடு வெளியே வருகிறார்கள். அப்படி வந்தவர்கள் பிற்காலத்தில் தங்கள் இயல்புக்கான வாழ்மானத்தேர்வில் சாதிக்கிறவர்களை நிறைய பேர்களைக் காண முடியும்.

ஆக ஒவ்வொருவருக்கும் அவரின் இயல்புக்கான புத்தகத்தை, ஒவ்வொருவருக்கும் அவரின் இயல்புக்கான துறை படிப்பை எந்தவித நிபந்தனையும், தேவையற்ற நீட் போன்ற நுழைவுத் தேர்வு முறைகளும் இல்லாமல் தொடர சட்டசமூகம் தன்னை சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

படிப்பு முறையில், சட்ட சமூகம், இவ்வாறான தொடர் பாகுபாட்டை (ஏற்றதாழ்வை) நிறுவும் போது, சமூக உறுப்பினர் முரண்பாடு என்கிற அதே அளவு எதிர்நிலை ஏற்றதாழ்வை தூக்கிப் பிடிக்கவும், நேர்மறையாக வகைபாட்டு நிலையை நிறுவ ஆதரவு திரட்டி சாதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 

பல கம்யூனிச நாடுகள், அங்கே நிலவி வந்த பாகுபாட்டிற்கு எதிரான தீர்வாக முரண்பாட்டில் அமைந்து, பரபரப்பிலேயே உலா வருகிற நிலையில், பல சிறிய சிறிய ஐரோப்பிய நாடுகள் வகைபாட்டில் அனைத்து மக்களுக்கும் அனைத்தும் பகிர்ந்து சாதித்து வருகின்றன. இந்தியாவில் இருந்து அந்த வகை நாடுகளுக்கு குடிபெயர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதை வகைபாட்டு வெற்றிக்கு சான்றளிப்பாகக் கொள்ளலாம்.

இயல்புகள் பலவாகத்தான் இருக்கும். இந்த இந்த இயல்புகளுக்கு மட்டுமே வாழ்க்கை என்கிற பாகுபாட்டுநிலையை எதிர்க்க இந்த இயல்புக்கும் வாழ்க்கை வேண்டும் என்கிற போராட்ட முரண்பாடு தவிர்க்க இயலாதது. ஆக தீர்வு அனைத்து இயல்புகளுக்கும் வாழ்க்கை என்கிற வகைபாடு மட்டுமே ஆகும்.

இயல்புக்கான புத்தகங்களும், படிப்புமுறையும் அனைவரின் மனதையும் துள்ளல் நிலையில் வைத்திருக்கும் என்பதும்- அந்த இரண்டும் மறுக்கப்படும் போது எதிரான போராட்ட மனநிலையையோ, தீர்வான வகைபாட்டு மனநிலையையோ பிரதிபலிக்கும் என்பதும்- உங்கள் வினாவிற்கான விடையாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,451.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.