Show all

கணியக்கலை: 18,70,196

நியுமாராலஜி என்கிற எண்ணியலை நிறைய தமிழர்கள் நடைமுறையில் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணியல் கலையை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு என்று தேடிப் போகின்றனர். இதற்கு நாம் முதலாவதாகச் செய்ய வேண்டிய வேலை: நம்முடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கான எண் கண்டு பிடித்து, அந்த எண் நமது பிறந்த (ஆங்கிலத்) தேதிக்குப் பொருந்த வில்லையென்று- நமது பெயரை சிதைத்து அல்லது முழுமையாக மாற்றி உறுதியான முன்னேற்றத்தை அடைய வாய்ப்பிருப்பதாக சொல்லப் படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நாள்: 12
கிழமை: வியாழம்
மாதம்: ஆனி
பருவம்: முதுவேனிற்காலம்
தமிழ் தொடர் ஆண்டு: 5121
நாள்மீன்: அசுவனி
ஓரை: மேழம்
தமிழ்தொடர்நாள் எண்: 18,70,196
இன்றைய இயல்பு எண்: நான்கு
இயல்பு: பயணம்
நியுமாராலஜி என்கிற எண்ணியலின் தமிழ் மூலமான கணியக்கலை குறித்து பேசவிருக்கிறது இந்தக் கட்டுரை! 
இந்தக் கலையில் நாம் நுழைய முற்பட்ட உடனேயே-
தமிழ்! என்னுடைய முதலாவது உடைமை. என் தாய் தன் இரத்தத்தை பாலாக்கி என் உடல் வளர்த்தார். தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார். என்உடலும் என்தமிழும் என் தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள்! அவைகளே எனக்கு அடிப்படை! அவைகளே எனக்கு ஆதாரம்! என்று தமிழைத் தரணி போற்றச் செய்ய வேண்டிய நாம்-

நம்முடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கான எண் கண்டு பிடித்து, அந்த எண் நமது பிறந்த (ஆங்கிலத்) தேதிக்குப் பொருந்த வில்லையென்று- இன்று தமிழர் ஆண்டு கணக்குப்படி நாள்:11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: என்கிற 5120 ஆண்டு கால வரலாற்றையும் தொலைத்து-

பிறந்ததிலிருந்து இன்று வரை, நம் பழந்தமிழர் “விசும்பு” என்று அழைத்த பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில் பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை

சிதைத்து அல்லது முழுமையாக மாற்றி உறுதியான முன்னேற்றத்தை அடைய வாய்ப்பிருப்பதாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழர் இந்த வகை முயற்சியில் பிழை இருக்கிறது என்பதற்காக அவர்தம் முன்னேற்றத்திற்கான முயற்சிக்கே தடை போடுவது தவறு; மிக மிக தவறு. என்ன செய்ய வேண்டும்?

அதை விட சிறந்த, செப்பனிடப் பட்ட, தமிழர் எந்த அடிப்படைகளையும் இழக்காத மாற்று வழியைக் காட்ட வேண்டும்! இயன்ற வரை முயல்வோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,196.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.