Show all

தொழில் கல்வியை தொடக்கப்பள்ளி நிலையிலேயே கொண்டு வந்தால் என்ன?

படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட மாணவனுக்கு எலக்ட்ரானும் நியூட்ரானும் பிதகோரஸ் தியரமும் எவ்விதத்திலும் உதவவில்லையே. தொழில் கல்வியை ஆரம்ப நிலையிலேயே கொண்டு வந்தால் என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. 
முதலில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது பள்ளிக்கல்வி முழுமையும் தமிழ் (தாய்மொழி) வழிக் கல்வியாக இருக்க வேண்டும் என்பதே.

தமிழ்வழிக் கல்வியில் படித்தால் படிப்பை எந்த நிலையில் நிறுத்தினாலும் வாழ்க்கையில் உறுதியாகப் பயன்படும். ஆங்கில வழிக்கல்வி முழுக்க முழுக்க நிருவாகக் கூலித்தளத்தில் வேலை பெறுவதற்கானது. அதற்கு கல்வி முழுமையாகப் படிக்கப் படவேண்டியது கட்டாயம். அதனாலேயே ஆங்கில வழிக்கல்வியை பாதியில் விடுகிறவர்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடுகிறது.

பள்ளிக் கல்வியில் தொழில்கல்வியை முன்னெடுப்பது பிழையான பாடு ஆகும். அப்படித் தரும்போது குறிப்பிட்ட ஒரு ஒருதுறையின் உடல்உழைப்புத்தளத்திற்கு அந்தப் பிள்ளை அடிமையாக்கப்பட்டு விடும்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் என்ற தலைப்பில், நடைமுறையில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்குக் கொடுக்கப்படுகிற தொழில் கல்வியில் இருந்து வெளிவருகிற யாரும், தொழிலாளியாகவே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். அடிப்படைக் கல்வித் தகுதியோடு ஓராண்டு இரண்டு தொழிற்பயிற்சி முடித்து சான்றிதழ் பெறுகிறவர்களுக்கே இந்த நிலை. அடிப்படைக் கல்வியே இல்லாமல் தொழில்  கல்வியை அரைகுறையாக பெற்றுக் கொண்டு வெளியேறினால் அவர்கள் பாடு என்ன ஆகும்.

இந்தியா முழுவதும் 14000க்கு மேலான அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் இருந்து ஆண்டுக்;கு ஒருகோடி பேர்கள் வெளியே வருகிறார்கள். அவர்களில் யாரும் அடுத்த கட்ட நிலைக்குத் தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கான தரவுகள் இல்லை. 

வேண்டுமானால் இப்படி மாற்றிச் சிந்திக்க முயன்றால் உறுதியாக சிறப்பான பலன் இருக்க முடியும். அனைத்துத் தொழில் நுட்பப் படிப்புகளுக்கும பத்தாம் வகுப்போடோ, பனிரெண்டாம் வகுப்போடோ இந்த தொழிற்பயிற்சி சான்றிதழைத் தகுதியாக்க வேண்டும் என்று போராடலாம்.

இதனால் உழைப்பை மையப்படுத்தி அறிவை ஆழப்படுத்த முடியும். உழைப்பை மையப்படுத்தி அறிவை ஆழப்படுத்துவதால் நடப்பில் உள்ள ஏற்றதாழ்வை வீழ்த்திட சிறந்த வாய்ப்பு கிடைக்கும் 

மாறாக, தொடக்கல்வியில் தொழிற்பயிற்சி என்பதெல்லாம் பார்ப்பனிய ஏற்றதாழ்வு கட்டமைப்புக்கான சிந்தனையே ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,673. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.