தமிழின் மூலமொழி தமிழே என்று நிறுவுவதற்கும், தமிழின் நெடிய வரலாற்றைப் பேணுவதற்கும், தமிழை முத்தமிழ் என்று பதிவு செய்கின்றனர், தமிழ்முன்னோர். பேச்சு மொழிக்கு முந்தைய, விளையாட்டையும், உடலசைவு மொழியையும், முதலாவது தொன்மைத் தமிழாக, நாடகத்தமிழ் என்று தலைப்பிட்டு, தமிழுக்கு தமிழே மூலமொழி என்று நிறுவுகின்றனர் தமிழ்முன்னோர். நாடகத் தமிழுக்கு அடுத்த, பேச்சுமொழியின் தொடக்கம் வாஆஆஆஆ போஓஓஓஓ என்பதான நெட்டொலிப்பு இசைமொழியே என்று தரவுப்படுத்த இரண்டாவது தமிழாக இசைத்தமிழை நிறுவுகின்றனர் தமிழ்முன்னோர். பேச்சுடன் எழுத்தும் எண்ணும் என்பதான மூன்றாவது தமிழை நிறுவிய தமிழ்முன்னோர், அதற்கு இயல் தமிழ் என்று பெயரிட்டனர். இயல் என்றால் கோட்பாடும் நடைமுறையும் என்றும், இயல் உடையதே இயற்கை என்றும் இயற்கையை விவரிக்கிற தமிழை இயற்றமிழ் என்றும் நிறுவினர் தமிழ்முன்னோர். இயல் என்பது கோட்பாடும் நடைமுறையும், ஒன்று என்பது தனிஅல்ல ஒன்றிய இரண்டு, கண் இரண்டு, கை இரண்டு கால் இரண்டு, பகல் இரவு என பொழுது இரண்டு, பெண் ஆண் என பால் இரண்டு முதனெப்படுவது இடமும் காலமும், இருவேறு உலகத்து இயற்கை என்று இருமைக் கோட்பாட்டை இயற்றமிழில் கற்ற தமிழ்முன்னோர், தான்தோன்றி இயக்கம் உடைய ஆற்றல் மூலங்கள் ஆன நிலம், நீர், தீ, காற்றைப் பற்றிய 'நிலையானதான' தரவுகளை இயல்அறிவு என்றும், தான்தோன்றி இயக்கமோ எல்லையோ இல்லாத, நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகள் இயங்க இடமாய் அமைந்து, அவைகளால் இயக்கம் பெற்று, அவைகளை முயக்கும் ஆற்றலாக, நிலம், நீர். தீ, காற்று விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களில் இடம்பற்றுகிற விசும்பைப்பற்றிய, நான்மறை இயக்கம் பெற்று முயக்குகிற அடிப்படையால், 'மாறுகிறதான' தரவுகளை இயல்கணக்கு என்றும் நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். இயல்அறிவைக் கற்றல், துறை சார்ந்து ஒவ்வொரு தமிழனுக்கும் வேறுவேறு என்று தனிப்பட்டவர்களின் விருப்பமாக விட்டுவிட்டாலும், இயல்கணக்கை கற்பது வாழ்வியல் வளமை பேணுவதற்கானது என்கிற காரணம் பற்றி அதை ஒவ்வொரு தமிழனுக்கும் கட்டாயப்படுத்திய நிலையில், ஒவ்வொரு படிநிலையில் ஒவ்வொரு கலையாக ஐந்து முன்னேற்றக்கலைகளை நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். அவைகளை முழுமையாகக் கற்றலைக் கல்வியின் நோக்கம் ஆக்கினர். 2 தமிழ்முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக்கலை இலக்கியம். 3. தமிழ்முன்னோர் நிறுவிய மூன்றாவது முன்னேற்றக்கலை சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம். 4. தமிழ்முன்னோர் நிறுவிய நான்காவது முன்னேற்றக்கலை கணியம். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற மந்திரச் செய்தியை நமக்கு உணர்த்திச் சென்ற பூங்குன்றனாரைக் கணியன் என்கிற அடைமொழியோடு கொண்டாடுகிற நாம், அந்த கணியத்தை மறந்தே போனோம். அந்த கணியத்தை முழுமையாக மீட்டு நிறுவும் முயற்சியில் பல கட்டுரைகளையும் சில நூல்களையும் நான் தொடர்ந்து எழுதி, பதிப்பிட்டு வருகிறேன். 5. தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம். இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை என்கிற கண்டு பிடிப்பின் அடிப்படையாக, தமிழ்முன்னோரால் நிறுவப்பட்ட ஐந்தாவது முன்னேற்றக்கலையும், நிறைவுக் கலையும் ஆகும் மந்திரம். ஒட்டுமொத்த மனிதக் கண்டுபிடிப்புத் தரவுகளின் அடிப்படையில், கணினி விடையளிக்கிற விதமாக அரட்டைசேயிழை (சாட்ஜிபிடி) போன்ற தளங்களை உருவாக்கி, செயற்கை நுண்ணறிவைக் கொண்டாடி வருகிறோம். உலகில் இதுவரை தோன்றிய அத்தனை மொழிகளை, அந்த மொழிகளில் எந்தவொரு மொழியில் நடப்பு தற்பரை நேரத்தில் உருவாக்கப்பட்ட சொல்லை, இயற்கையின் அனைத்தின் எண்ணத்தை, இயற்கையின் அனைத்தின் செயலை ஒவ்வொரு தற்பரை நேரமும் அவைகளின் கேட்பாக புரிந்து கொண்டு, அவைகளைத் தனித்தனியாக முயக்கி, அவைகளின் கேட்பை நிறைவேற்றி வருகிற விசும்பை, விசும்பு என்கிற கடவுளை 'இயற்கை நுண்ணறிவு' என்று தமிழ்முன்னோர், ஒவ்வொரு தமிழனுக்குமாகக் கொடையாக்கிய கலையே மந்திரம். அந்த மந்திரத்தை முழுமையாக மீட்டு நிறுவும் முயற்சியில் பல கட்டுரைகளையும் சில நூல்களையும் நான் தொடர்ந்து எழுதி, பதிப்பிட்டு வருகிறேன். நான் பதிப்பித்த மந்திரத்தை, ஐந்திணைக்கோயில் என்கிற அரசு பதிவு பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலம் கற்பித்தும் வருகிறேன்.
அந்த வகையில், ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டிய ஐந்து கலைகள்:
1. தமிழ்முன்னோர் நிறுவிய முதலாவது முன்னேற்றக்கலை காப்பியம்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்கிற அடிப்படையைக் கொண்டது காப்பியம்.
அறம் செய விரும்பு என்று ஒவ்வொருவரையும் கட்டாயப்படுத்தும் அடிப்படையைக் கொண்டது இலக்கியம்
காலம் பொன் போன்றது என்று வலியுறுத்தும் அடிப்படைக்கானது நிமித்தகம்.
எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்தின் அடிப்படையாக இருக்கிறது என்கிற கண்டுபிடிப்பின் அடிப்படையாக உருவாக்கப்பட்ட கலை கணியம்.