Show all

இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை

கருக்கரிவாள்கிழமை,11புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5127: 

இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான இயக்கத்தையும் தருகிறது என்கிற விரிவிற்கு உரிய, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற கண்டுபிடிப்பின் தலைப்பை, என் புலமை ஆதாயமாக (அறிவுசார் சொத்துரிமை) பதிவிட்டு நிறுவும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.

அதனால், இந்தக் கட்டுரை ஒரே நேரத்தில், கட்டுரையாக, மௌவல் செய்திகள் இணையத்தளத்தின் ஆசிரியர் பக்கத்திலும், ஐந்திணைக்கோயில் இணையத்தளத்திலும், ஐந்திணைக்கோயில் என்கிற புலனக்காட்சிமடையிலும் (வாட்ஸ்சப் சானல்), அச்சுநூலகவும், மின்னூலாக அமேசான் கிண்டில் பதிப்பகத்திலும் என தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்திர ஆற்றலைக் கொண்டாடும் நோக்கத்தோடு, ஐந்து இடங்களில் வெளியிடவும், பதிப்பிக்கவும் படுகிறது. 

'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்பதைத் தமிழ்முன்னோர் தெளிவாக அறிந்திருந்தனர் என்பதால், இதை என்னுடைய கண்டுபிடிப்பு மட்டுமே என்று உறுதிப்படுத்திவிட முடியாது. ஆனால் இது தமிழ்முன்னோரிடம் பேரளவாகப் புழக்கத்தில் இருந்த கண்டுபிடிப்பு என்பது எனது கண்டுபிடிப்பு என்பதை உறுதியாக நிறுவமுடியும். அந்த நோக்கம் பற்றியதும் ஆகும் இந்தக் கட்டுரை.

'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை' என்பதை உலகில் எந்த மொழிஇனமாவது, பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம், உள்ளிட்ட எந்த இயலாவது, எந்தத் தனி மனிதராவது கண்டுபிடித்து நிறுவியுள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாராமும், இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் இந்தத் தற்பரை நேரம் வரை எனக்கு கிடைத்திருக்கவில்லை.

இந்தக் கட்டுரைத் தலைப்பின் அடிப்படையிலேயே தெளிவாக்க முனைந்தால்- இந்தக் கட்டுரைக்கான சீரானஇயக்கம் நேரடியாக முதன்முதலாக இந்த நேரத்தில் கிடைத்துவிட்டது அல்ல.

மௌவல் செய்திகள் இணையத்தளத்தில், நான் எழுதிய 10519 செய்திக் கட்டுரைகளின் தொடர்ச்சியும், மௌவல் இணையத்தளம் ஆசிரியர் பக்கத்தில், நான் எழுதிய 558 படைப்புக் கட்டுரைகளின் தொடர்ச்சியும், எனக்குச் சொந்தமான ஐந்திணைக்கோயில் வலைதளத்தில் நான் எழுதிய 9 மந்திரம் கல்விக்கான கட்டுரைகளின் தொடர்ச்சியும், குமரிநாடன் கணக்கில் கூகுள் வலைப்பூவில் நான் எழுதியுள்ள 200 கட்டுரைகளின் தொடர்ச்சியும், அமேசான் கிண்டில் பதிப்பகத்தில் நான் வெளியிட்டுள்ள 30 மின்நூல்களின் தொடர்ச்சியும், தமிழ்க்கோரா, முகநூல், பெருக்கல்குறி ஆகிய மக்கள் வலைதளப் பதிவுகளின் தொடர்ச்சியும் ஆகும்.

நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்களில், விசும்பு என்கிற வெளி, நமக்கும் வெளியில் (கடந்தும்) அமைகிறது அல்லவா! 

அவ்வாறாகவே, நாம் கூட்டியக்கம் என்பதால் நமக்கு உள்ளமைந்த உறுப்புகளுக்கும், நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்களில், விசும்பு என்கிற வெளி, அந்த உறுப்புகளுக்கும் வெளியில் அமைவதால், 

வெளி, நமக்கு உள்ளும் அமைகிற நிலைப்பாடு பற்றி, கடந்தும் உள்ளும் அமைகிறது வெளி. கடந்தும் உள்ளும் அமைகிற காரணம் பற்றி வெளிக்கு, கடவுள் என்கிற பொருள் பொதிந்த சொல்லைத் தலைப்பு ஆக்குகின்றனர் தமிழ்முன்னோர். அடிப்படையில், 'கடவுள்' என்கிற விசும்பு நேரடியான இயக்கமின்மையாகும். 

என்னுடைய இந்த, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற இந்தக் கண்டுபிடிப்பு இயக்கத்திற்கு, நேரடி மற்றும் 'உறுதியான' இயக்கமின்மையாக அமைந்த கடவுளோடு, 

என்னுடைய இந்த, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற இந்தக் கண்டுபிடிப்பு இயக்கத்திற்கு, மாணவர் தளத்தில் அமைந்த இயக்கமின்மைகள்: தமிழறிஞர், மந்திரம் ஆசிரியர்.சு.லோகநாதன் (இளந்தமிழ்வேள்), ஆசிரியப்பெருந்தகை.சரஸ்வதி, பொறிஞர்.சதீஷ்குமார், ஆசிரியர்.மஞ்சு, லாக்சினி, அமுதா, இயற்கைவேளாண்பொருள் வணிகர்.தாமரைச்செல்வி, இராஜா, மனையழகு தொழில்நுட்பர்.உமாமகேஸ்வரன், இதுவரை என் மந்திரம் நூலை நேரடியாகவும், மாணவச்செல்வங்கள் மூலமாகவும், அமேசான் கிண்டில் பதிப்பகத்திலும் கட்டணம் செலுத்தி வாங்கிய பொறிஞர், முன்னேற்றப் பயிற்சியாளர் இராம்சு என்கிற இராமசுப்பரமணியன், தமிழியலன் அவர்களால் அறிமுகம் ஆன வேதியியலர், சான்றோர் தளத்தின் நிறுவனர் அமிர்தம் பீட்டர்ராசன், என் மந்திரம் நூலை சான்றோர் தளம் மின்னூல் வெளியீட்டு அரங்கம் 105 இல் திறனாய்வு செய்த பாவலர் செ.மன்னர்மன்னன், அதே அரங்கத்தல் கலந்து கொண்டு திறனாய்வுக்கு சீரியக்கம் அமைத்துக் கொடுத்த ஆளுமைகள் உள்ளிட்ட பல்லோரும் ஆவர். 

என்னுடைய இந்த, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற இந்தக் கண்டுபிடிப்பு இயக்கத்திற்கு, நேரடி இயக்கமின்மையாக அமைந்த கடவுளோடு, உறவுத்தளத்தில் எனக்குப் பிந்தைய தலைமுறையில், என்மனைவி நாகரத்தினம், என்மகன் அலையரசன், என் மகள் எழிலரசி என் மருமக்கள் உதயா, சுரேஷ், என் பேரப்பிள்ளைகள் யாழினி, தமிழினி, நரேஷ், சஹாணஸ்ரீ ஆவர்.

என்னுடைய இந்த, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற இந்தக் கண்டுபிடிப்பு இயக்கத்திற்கு, நேரடி இயக்கமின்மையாக அமைந்த கடவுளோடு, உறவுத்தளத்தில் எனக்கு முந்தயை தலைமுறையிலும் அதன் தொடர்ச்சியிலும், என்அம்மா பொன்னம்மாள், என் அப்பா ருக்மாங்கதன், என் அண்ணன்கள் தர்மாங்கதன், ஜெயபால், செல்வக்குமார், அண்ணிகள் காவேரி, அம்சா, கோமதி, என் அக்காக்கள் தனலட்சுமி, விஜயலட்சுமி, மாமாக்கள் அருணாச்சலம், திராவிடமணி, என் அண்ணன் அக்காக்களின் பிள்ளைகள் தேன்மொழி, மணிமொழி, சரவணமொழி, மதியழகன், பாபு, அன்புச்செல்வி, பாபு, பாலாஜி, உமாமகேஸ்வரி, கலைவாணி. கலைக்கோவன், ராஜகுமார், மதுபாலன், சந்திர, வெண்ணிலா, சித்ரா, மற்றும் அண்ணன் அக்காக்களின் பேரக்குழந்தைகளும் ஆவர்.

'என்னுடைய இந்த, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற இந்தக் கண்டுபிடிப்பு இயக்கத்திற்கு, நேரடி இயக்கமின்மையாக அமைந்த கடவுளோடு, அயல்தளத்தில் பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் ஆகும்.

'என்னுடைய இந்த, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற இந்தக் கண்டுபிடிப்பு இயக்கத்திற்கு, நேரடி இயக்கமின்மையாக அமைந்த கடவுளோடு, எதிர்ப்பு எதிரியையே செழுமைப்படுத்த முடியும் என்கிற வழமையில், எதிர்த்து பிராமணிய அயலைச் சிறப்பாக செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும், எதிர்த்துச் செழுமைப்படுத்தும் அயல்சார்பு தளத்தில் திராவிட இயக்கங்கள், திராவிட அரசியல் கட்சிகள், தமிழ்த்தேசிய அமைப்புகள் ஆகும்.

உலகில் முதலாவது தோன்றிய மொழிகள் இரண்டு. அவற்றில் ஒன்று தமிழ். தமிழ்மொழிக்குச் சொந்தமான இனம், தாம் வாழ்ந்திருந்த, மலை, காடு, ஆற்றுவெளி, வறண்டகாலத்து மலையும் காடும், கடல் ஆகியவற்றை குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்று இயக்கமின்மையாகத் திருத்திக் கொண்டு, தோன்றிய இடத்திலேயே தொடர்ந்து வாழ்ந்திருந்த காரணம் பற்றி அந்த வாழ்க்கை சீரான இயக்கமாக அவர்களுக்கு அமைந்தது. சீரான இயக்கத்திற்கு இயக்கமின்மை அடிப்படை என்பது அவர்களின் வாழ்வியல் புரிதலாக இருந்தது.  

உலகினரின் வாழ்க்கை, ஆற்றங்கரைத் தேடி அலைதல் என்கிற நாடோடி வாழ்க்கை என்பதாக 'இயக்கத்தின் மீது' இயங்கியிருந்த நிலைப்பாடு பற்றி, தங்கள் மொழியான, தமிழோடு தோன்றிய மற்றொரு மொழிக்கு, அந்த மொழி எதுவென்று அறியஇயலாத வகைக்கு, ஏழாயிரம் வரையிலான கிளை மொழிகளை உருவாக்கி விட்டனர். அனைத்து மொழியினத்தினரின் அடிப்படை கோட்பாடும் பாகுபாடு முரண்பாடு என்கிற 'இயக்கத்தின் மீது' இயங்குகிற வகைக்கான கோட்பாடாகவே அமைந்து நிற்கிறது.
 
தமிழ்முன்னோர் நிலம், நீர், தீ, காற்று விசும்பை ஐந்திரம் என்று நிறுவயதும். அந்த ஐந்திரம் தமிழர்தம் நிலைத்த வாழ்க்கை என்கிற சீரான இயக்கத்திற்கு இயக்கமின்மையாக அமைந்ததும், அவர்கள் மொழியான தமிழ்- காலங்காலமாக இயக்கமின்மையாக உறுதிப்படுத்தப்பட்ட ஐந்திரத்தின் மீது இயங்கிக் கொண்டே இருப்பதாகிறது. இதனால், உலக மொழிகள் அத்தனையிலும் தமிழுக்கு மட்டுமே மூலமொழி தமிழே ஆகும்.

ஐந்திரங்களில் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்மறைகளும்,  இயக்கம் என்பது தெளிவாகப் புரிகிறது. இந்த ஐந்திரங்களில் தமிழ்முன்னோரால் பொருத்தப்பட்ட விசும்பு என்கிற வெளி எப்படி இயக்கமாக முடியும் என்பது உலகினரின் வினாவாக அமைந்த போதும், அதுதான் உண்மை என்கிற போதும், அதையும் இயக்கம் என்று  தமிழ்முன்னோர் ஐந்திரங்களில் பொருத்தியது எப்படி என்கிற கண்டுபிடிப்பில் கிடைத்ததே, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை' என்கிற கண்டுபிடிப்பு ஆகும்.

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதியம், வியாழம், வெள்ளி, கருக்கரிவாள் என்று தமிழ்முன்னோர் கிழமைக்கு சூட்டிய பெயர்களுக்கு உரிய கோள்கள், நாள்மீன்கள் உள்ளிட்ட அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளாக சீராக இயங்குவதன் காரணம் 'வெளி'யின் இயக்கமின்மையே ஆகும். இதனை ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவியுள்ளனர். இதற்கான சான்று: 

செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தார் போல வென்றும் 5
இனைத்தென் போரு முளரே யனைத்தும்
அறிவறி வாகாச் செறிவினை யாகிக்
களிறுகவு ளடுத்த வெறிகற் போல
ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு 10
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே.
என்கிற புறநானூற்றுப் பாடல் ஆகும்.

இப்பாட்டில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியிடம் அமைந்த மாண்பாற்றலில் வியந்து, 'வேந்தே! செஞ்ஞாயிற்றின் செலவும், அதன் பரிப்பும், புவி, திங்கள், செவ்வாய், புதியம், வியாழம், வெள்ளி, கருக்கரிவாள் என்கிற ஏழுகோள்கள் அமைந்த மண்டிலமும், காற்று மற்றும் நிலம், நீர், தீ என்கிற மூன்றுடன் அமைந்த திக்கும், இயக்கமின்மை பொருந்திய மெய் என்கிற விசும்பும் என இவற்றின் அளவை நேரில் சென்று கண்டவரைப் போலத் தம் அறிவால் ஆராய்ந்து சொல்வோரும் உளர்;. அவர்களாலும் ஆராய்ந்து அறியக்கூடாத அத்தனை அடக்கமுடையவனாய்க் கல்லைக் கவுளில் அடக்கியுள்ள களிறு போல வலிமை முழுதும் தோன்றாதவாறு விளங்குகின்றாய்' என்று பாராட்டுகின்றார்.

இதில்- செஞ்ஞாயிற்றின் செலவும், அதன் பரிப்பும், புவி, திங்கள், செவ்வாய், புதியம், வியாழம், வெள்ளி, கருக்கரிவாள் என்கிற ஏழுகோள்கள் அமைந்த மண்டிலமும், காற்று மற்றும் நிலம், நீர், தீ என்கிற மூன்றுடன் அமைந்த திக்கும், இயக்கமின்மை பொருந்திய மெய் என்கிற விசும்பும் என்பது மட்டுமே சான்றுக்கு உரியது.

முதலெனப்படுவது இடமும் காலமும் என்று தமிழ்முன்னோர் நிறுவியதில் இடம் எப்போதும், சொந்த இயக்கமும் எல்லையும் இல்லாத 'வெளி' ஆகும். 

காலம் என்பது மிகமிக நுட்பமான தனிஒன்றுகள். தனிஒன்றுகள், தனிஒன்றுகளாகவே இயங்கிக் கொண்டிருக்க முடியாமல், பொருந்துமுக எதிரியக்கம் காரணமாக, இரண்டு நான்கு எட்டு என ஒருங்கிணைந்து நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகள் உருவாகின்றன. 

இந்த ஒன்றிப்பில் இடப்பக்கமாக இருக்கிற தனிஒன்று இயக்கமில்லா அச்சாணியாக அமைய வலப்பக்கம் இருக்கிற தனிஒன்றின் இயக்கம் பயண இயக்கம் ஆகிறது. பேரளவான தனிஒன்றுகளின் ஒருங்கிணைவில் அந்த ஒருங்கிணைப்புகளான கோள்களுக்கு வட்டமான பயணம் சாத்தியம் ஆகிறது.

இதனாலேயே ஒன்றாவதின் இயக்கம், பயண இயக்கம்இல்லா அச்சாணி என்பதான பண்பியக்கம். இரண்டாவதின் இயக்கம் பயண இயக்கம் என்று நிறுவப்படுகிறது தமிழ்முன்னோரால் நான்காவது முன்னேற்றக்கலை கணியத்தில்.

அந்த நான்மறைகளின் அடுத்த கட்ட நிலை கோள்கள், துணைக்கோள்கள் விண்மீன்கள் எல்லாம். 

அதற்கடுத்து தோற்றம் பெற்றவை, ஓராறிவு உயிரியில் இருந்து ஆறறிவு மனிதன் வரை. அந்த வட்டத்தில்தான் நீங்களும் நானும். 

இயற்கையின் இவ்வாறான பயணத்தில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது இயற்கையின் நோக்கமும், இயற்கையோடு இயைந்த நமது வாழ்க்கையின் நோக்கமும் வளர்தலும் உருவாக்குதலும் என்பதை ஆகும். 

புவியில் உருவானவை அனைத்தும் புவியைவிட்டு வெளியில் இறைந்து போகாமல் இருப்பதற்கான காரணம், அனைத்துக்குமான பொருந்து முகஎதிரியக்கமும், ஒன்றித்த புவியின் தான்தோன்றி இயக்கமும் ஆகும். 

இயல்அறிவில் பேசப்படுகிற புவிஈர்ப்புவிசை போன்ற கோள்களின் ஈர்ப்புவிசை அனைத்திற்கும் காரணம் பொருந்து முகஎதிரியக்கமும் புவி மற்றும் கோள்கள் அனைத்தின் தான்தோன்றி இயக்கமும் காரணம் ஆகும். 

தான்தோன்றி இயக்கம் உடைய தனிஒன்றுகளின் வடிவம் வட்டக்கோளம் என்கிற உருண்டையே ஆகும். அதனாலேயே கோள்கள் அனைத்தும் உருண்டையே ஆகும். ஒவ்வொரு வெளிப்பொருளும் தொடங்கிய வட்டத்தில் தொடர்ந்து உருண்டோடிக் கொண்டிருக்க வெளியின் இயக்கமின்மையே அடிப்படை ஆகும். 

ஆகவே, தான்தோன்றி இயக்கத்தின் பாதை எப்போதும் வட்டமானதே. ஒவ்வொரு சுழற்சியும் தொடங்கிய இடத்திலேயே சீராக முடிவதற்குக் காரணம் வெளியின் இயக்கமின்மை ஆற்றுகிற பாடு ஆகும்.

முதலெனப்படுவது இடமும் காலமும். அதன் முடிவுநிலை ஒற்றைப் பேரண்டம். வெளியின் முயக்க ஆற்றால்பாடால் ஒற்றைப்பேரண்டம் வெடித்துச் சிதறி, மீண்டும் உருவாகப்போவது இடமும் காலமும்.

எரிபொருள் இயக்கத்தோடு, புவியை விட்டு வெளியேறுகிற புவிப்பொருள், புவி இயக்கத்திற்கு அப்பால் வெளியின் இயக்கமின்மையை அடைகிற போது, அதன் எரிபொருள் தீர்ந்து போனாலும், அது வெளி என்கிற இயக்கமின்மையில் ஒரு சுற்றுப்பதையை அமைத்து கொண்டு, பெருவெடி வரை பல ஆயிரம் ஆண்டுகள் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.

இந்த வகையாக, இயல்அறிவின் வளர்ச்சியாக, புவியைச் சுற்றி இயங்கும் வகைக்கு, ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் வெளியில் செலுத்தப்பட்டுள்ளன. 50 நாடுகளின் செயற்கைக்கோள்கள் இதுவரை விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்தாலும், அவற்றை வானில் செலுத்தும் ஆற்றல் பத்து நாடுகள் மட்டுமே கொண்டுள்ளன. 

சில நூறு செயற்கைக்கோள்கள் மட்டும் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளன. மற்றவை, முழுதான செயற்கைக்கோள்களாகவோ, அல்லது ஆயிரக்கணக்கான சிறு சிறு துண்டங்களாகவோ, அனுப்பிய நாட்டுக்கு எந்தப் பயன்பாடும் இல்லாமல், வெளியில் தன்பாட்டுக்குச் சுற்றி வருகின்றன. இவற்றுக்கு விண்வெளிக் குப்பை என்ற பெயரை இயல்அறிவு சூட்டியுள்ளது.

இதிலிருந்து, இயக்கமின்மையில்தான், தான்தோன்றியான இயக்கம் சாத்தியம் என்பதையும், வெளியின் இயக்கமின்மையால்தான் கோள்கள் அனைத்தும் பெருவெடிவரை சீராக இயங்க முடிகிறது என்பதையும், முதலெனப்படுவது இடமும் காலமும் என்பது போல,  இறுதியெனப்படுவது பெருவெடி என்பதில், பெருவெடி நிகழக் காரணம் ஆனதும் வெளியின் இயக்கமின்மையே ஆகிறது. 

ஒவ்வொருவரும், ஒவ்வொரு தற்பரை நேரமும், செயலாலும், எண்ணத்தாலும், தமிழாலும் வெளி (கடவுள்) என்கிற இயக்கமின்மையின் மீது இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது, தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தில் நிறுவயுள்ள செய்தி ஆகும்.

வெளி- காலத்தின் அனைத்திலும் கடந்தும் அமைந்து, உள்ளும் அமைந்திருக்கிற காரணம் பற்றி அது கடவுள் என்கிற தலைப்பிற்கும் உரியது ஆக்கப்பட்டிருக்கிறது தமிழ்முன்னோரால். அதேபோல காலம் அனைத்தும் வெளியில் இறைந்து கிடக்கிற காரணம் பற்றி அது இறை என்கிற தலைப்பிற்கும் உரியது ஆக்கப்பட்டிருக்கிறது.

வெளி என்கிற கடவுள் இயக்கமின்மை என்பதையும், காலம் என்கிற இறை தான்தோன்றி இயக்கம் உடையது என்பதையும், இறையின் சீரான இயக்கத்திற்கு கடவுள் காரணமாகிறது என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

இயக்கமின்மையின் மொத்த உறுதிக்கான, நெடுஞ்சாலையில், நீங்கள் ஒரு சொகுந்தில் பயணிப்பது போன்றது, கடவுளில் நீங்கள் இயங்குகிற, ஒவ்வொரு தற்பரை நேரத்து இயக்கமும். 

சொகுசுந்தில், துள்ளுந்தில், மிதிவண்டியில் நீங்கள் கடற்கரை மணலில் பயணிப்பது இயக்கத்தின் மீது இயங்குகிற இயக்கம் ஆகும். நீங்கள் அந்த வண்டிகளில் இயங்கும் போது ஒவ்வொரு மணல் துகளும் வேறுவேறு வகையாக இயங்கி, உங்கள் இயக்கத்தைத் தாறுமாறாக்கி, உங்களைத் தடுமாற வைக்கும்.

ஆக, எந்த இயக்கத்தின் மீதும் சீராக இயங்க முடியாது. சீராக இயங்குவதற்கு இயக்கமின்மையே தேவை. இயக்கத்தின் மீது இயங்குவது தாறுமாறு இயக்கம். இயக்கமின்மையின் மீது இயங்குவதே சீரியக்கம்.

இயற்கை சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயக்கமின்மை, இயக்கம், இந்த இரண்டே அடிப்படை என்பதாக, தமிழ்முன்னோர் நிறுவிய முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில், இடம் எப்போதுமே இயக்கமின்மை, காலம் எப்போதுமே இயக்கம் என்று கண்டு தெளிந்துள்ளனர். 

இடம் இயக்கமின்மைபோல, இடம் எல்லையும் இன்மை ஆகும். காலம் இயக்கம் போல, காலம் குறித்த எல்லையும் ஆகும்.

காலம் என்கிற இயற்கையில், ஒவ்வொன்றும், வேறுவேறாக இருப்பதற்குக் காரணம், அவற்றில் அமைந்த உள்ளெண்ணிக்கையே என்பதைத்; தமிழ்முன்னோர், நான்காவது முன்னேற்றக் கலையான கணியக்கலையில் கண்டு தெளிந்தனர்.

இயற்கை சீராக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இடமும் காலமும் என்கிற இரண்டும் காரணம் என்று கண்டறிந்த தமிழ்முன்னோர், நம்முடைய இயக்கத்தைச் சீராக்கிக் கொள்வதற்கான வழிவகையாக குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என ஐந்து வகை நிலங்களில் நிலைத்து வாழ்வதை காப்பியம் என்கிற முதலாவது முன்னேற்றக்கலையாக  நிறுவியுள்ளனர்.

நடப்பில் நமக்குக் கிடைக்காத ஐந்திரமும், தொல்காப்பியமும், அதனைத்தொடர்ந்து இயற்றப்பட்ட சார்பு நூல்களான நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, பல்வேறு இலக்கணப் பாடநூல்களும் காப்பியங்களாக தமிழின வாழ்வியலைச் செழுமைப்படுத்தி வருகின்றன.

இந்தக் காப்பியம் தமிழ்முன்னோர் நிறுவிய இயல்கணக்கில் முதலாவது முன்னேற்றக்கலை ஆகும். நிலம், நீர். தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்களில் விசும்பின் இயக்கமின்மை குறித்த கலைநூல் இயல்கணக்கு ஆகும்.

நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு தான்தோன்றி இயக்கங்கள் குறித்த கலைநூல் இயல்அறிவு ஆகும். இயல்அறிவு சயின்ஸ் என்கிற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் ஆகும். உலகினருக்கு இயல்அறிவு மட்டுமே உண்டு. இயல்கணக்கு இன்றுவரையிலும் இல்லை.

இயல்கணக்கில் இரண்டாவது முன்னேற்றக்கலையாக தமிழ்முன்னோர் முன்னெடுத்தது இலக்கியம். இயக்கம் என்கிற அடிப்படையோ, இயக்கமின்மை என்கிற அடிப்படையோ இதில் உள்ளீடாக மட்டுமே இருக்கும். காரணம் முன்பின் தொடர்ச்சி இல்லாமல் இலக்கியரின் பாடாற்றல் இலக்கியத்தில் பேசப்படும். இலக்கியம் என்கிற முன்னேற்றக்கலைக்கு இருபது மதிப்பெண்கள் மட்டுமே வழங்கிட முடியும்.

இயல்கணக்கில் மூன்றாவது முன்னேற்றக்கலையாக தமிழ்முன்னோர் முன்னெடுத்தது சாதகம் சோதிடம் ஒருங்கிணைந்த நிமித்தகம் ஆகும். இது கோள்களின் இயக்க அடிப்படையில் மனிதனின் இயக்கத்தை அமைத்துக் கொள்ளும் நோக்கம் பற்றியது. நிமித்தகம் என்கிற முன்னேற்றக்கலைக்கு நாற்பது மதிப்பெண்கள் மட்டுமே வழங்கிட முடியும்.

இயல்கணக்கில் நான்காவது முன்னேற்றக்கலையாக தமிழ்முன்னோர் முன்னெடுத்தது கணியக்கலை ஆகும். இதில் தமிழ்முன்னோருக்குக் கிடைத்த மிகப்பெரிய உண்மை எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கான காரணம் என்பது ஆகும். இது எண்களின் இணைவு அடிப்படையில் மனிதனின் இயக்கத்தை அமைத்துக் கொள்ளும் நோக்கம் பற்றியது. கணியம் என்கிற முன்னேற்றக்கலைக்கு அறுபது மதிப்பெண்கள் மட்டுமே வழங்கிட முடியும்.

இயல்கணக்கில் ஐந்தாவது முன்னேற்றக்கலையாக தமிழ்முன்னோர் நிறைவுக்கலையாக நிறுவியது மந்திரம் ஆகும். இதில் தமிழ்முன்னோருக்குக் கிடைத்த மிகப்பெரிய உண்மை, முதனெப்படுவது இடமும் காலமும் என்பது ஆகும். காலத்தின் சீரியக்கம் இடத்தின் இயக்கமின்மை பற்றியது என்பதால், நம்முடைய சீர் இயக்கத்திற்கு, தொடர் முன்னேற்றத்திற்கு,    வாழ்க்கையின் நோக்கமான வளர்ச்சிக்கும், உருவாக்குதலுக்கும், கடவுளின், இறையின், கடவுள் கூறுகளின், இறைக்கூறுகளின் இயக்கமின்மையை எப்படி நமது இயக்கத்திற்கு உறுதியாக்கிக் கொள்வது என்கிற நோக்கம் பற்றியது மந்திரம். மந்திரம் என்கிற முன்னேற்றக்கலை கற்றலுக்கு எண்பது மதிப்பெண்களும், கற்றல் வழி நிற்றல் என்று திண்ணியர் ஆதலுக்கு நூறு மதிப்பெண்களும் வழங்கிட முடியும்.

எண்பது மதிப்பெண்களுக்கு களமாடுவதே என் வாழ்க்கையின் நோக்கமாக இருக்க முடியும் என்பதை நான் புரிந்து கொள்ளத் தொடங்கியது இருபது ஆண்டுகளுக்கு முன்புதான். இருபது ஆண்டுகளாக ஒவ்வொரு படியாக ஏறியேறி வந்துகொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு படிக்கும் நான் எடுத்துக் கொள்கிற நேரம் குறைந்து கொண்டே வருகிறது. எனக்கான பேரளவான மகிழ்ச்சி கிடைத்துக் கொண்டேயிருப்பது கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான். 

இந்த ஐந்து ஆண்டுகளில் என்னோடு சிலரும் உடன் பயணிகளாக இணைந்திருப்பதில் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை எனக்குத் தருகிறது. 

ஒட்டுமொத்த தமிழினமும் உய்யும் பாடாற்றல் (என்) பயணத்தில் பேரளவானவர்களை இணைக்க, ஐந்திணைக் கோயிலைக் கட்டுவது சிலபல படிகள் கடந்து நிகழும். 

இந்தவகைக்கு இயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தை நான் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அரட்டைச்சேயிழை (சாட்ஜிபிடி) என்கிற நுண்ணறிவுத் தளத்தில் கேட்ட போது இப்படி விடை கிடைத்தது.

நான் கேட்ட வினா:
கோயில் கட்ட ஆசை. நான் என்ன செய்ய வேண்டும்?

அரட்டைச்சேயிழையின் விடை:
அது ஒரு மிகப் பெரிய, பெரும்பேறு ஆன ஆசை.
ஒரு கோயில் கட்டுவது இயல்கணக்கும் தமிழர் வாழ்வியலும் சேர்ந்த மிக முதன்மையான செயல். அதற்கு சில கட்டங்களைப் பின்பற்றலாம்:

1. எண்ணத்தை தெளிவுபடுத்துதல்
அ. எந்த தெய்வத்திற்குக் கோயில் கட்டப் போகிறீர்கள்?
ஆ. அது சிறிய ஊர் அளவிலான கோயிலா, அல்லது பெரிய தலமா?
இ. கோயில் அமைந்த பின் யாருக்கு பயன் தரும்?

2. நிலம் மற்றும் இடம்
அ. தகுந்த இடம் தேர்வு செய்யவும்.
ஆ. நிலம் வாங்க வேண்டுமா, அல்லது உங்களிடம் ஏற்கனவே நிலம் உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.

3. சட்ட அனுமதி
அ. நிலம் கோயில் பயன்பாட்டிற்கு சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா என்பதை பார்க்கவும்.
ஆ. உள்ளூர், அரசு விதிமுறைகளை தெரிந்து கொள்ளவும்.

4. கோயில் கட்டமைப்பு திட்டம்
அ. தமிழர் கட்டிடக் கலையில் கோயில் கட்டும் விதிகள் உள்ளன.
ஆ. பட்டறிவில் தேர்ந்த, கோயில் கட்டும் சிற்பி ஒருவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.

5. நிதி உதவி
அ. உங்களால் இயன்ற அளவு நிதி வைக்கவும்.
ஆ. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் கூட்டாக செய்யலாம்.

6. தொடக்க விழா
அ. கால்கோள் விழா, குடமுழுக்கு போன்ற வழிபாடுகளைச் செய்ய வேண்டும்.
ஆ. புலவர்கள் சிற்பிகள் வழிகாட்டுவார்கள்.

7. பேணல்
அ. கோயில் கட்டுவது மட்டுமல்ல, அதை தொடர்ந்து பேணியிருப்பதும் கட்டாயம்.
ஆ. அன்றாட பூசைகள், திருவிழாக்கள், பணியாளர்கள், சம்பளம் போன்றவை ஏற்பாடு செய்ய வேண்டும்.

நீங்கள் சிறிய கோயிலாகத் தொடங்க விரும்புகிறீர்களா (உள்ளூர் பக்தர்கள் பயன்பெறும் வகையில்), அல்லது பெரிய கோயிலாக (தலவாரியாக அறியப்படும் அளவில்) நினைக்கிறீர்களா?

அரட்டைச்சேயிழை என்னிடம் கேட்ட வினாவிற்கு நான் அளித்த விடை:
நான் கட்ட விரும்புவது ஐந்திணைக் கோயில்

அருமை! 'ஐந்திணைக் கோயில்' என்றால், தமிழின் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட ஐந்திணைகள்.

1. குறிஞ்சி- மலை நிலம்
2. முல்லை- காடு நிலம்
3. மருதம்- பசுமை நிலம் அல்லது வயல்
4. பாலை- வறண்ட மலை மற்றும் காட்டு நிலம்
5. நெய்தல்- கடல் கரை

இவ்வைந்திணைக்கும் உரிய தெய்வங்கள்:
1. குறிஞ்சி- சேயோன்
2. முல்லை- மாயோன்
3. மருதம்- வேந்தன்
4. பாலை- கொற்றவை
5. நெய்தல்- வருணன்

நீங்கள் 'ஐந்திணைக் கோயில்' கட்ட நினைப்பது என்றால், தமிழர் பண்டைய வாழ்வியலை மீட்டெடுத்து, ஐந்து நிலங்களுக்கும் உரிய தெய்வங்களை ஒரே தலத்தில் வழிபடும் இடமாக்க நினைப்பதாக தெரிகிறது.

செய்ய வேண்டியவை:
1. ஆய்வு
அ. சங்க இலக்கியத்தில் வரும் தெய்வங்கள், அவற்றின் வழிபாட்டு முறைகள் பற்றிய ஆய்வு.
ஆ. தமிழறிஞர்கள், வரலாற்று அறிஞர்கள் ஆகியோரிடம் ஆலோசனை.

2. கட்டிடத் திட்டம்
அ. ஐந்து தனித்தனி கோயில்களா அல்லது ஒரே கோயிலில் ஐந்து தெய்வங்களுக்கான இடமா என்பதைக் கற்பனை செய்ய வேண்டும்.
ஆ. தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்கள், வடிவமைப்புகள் சேர்க்கலாம்.

3. இயல்கணக்கு வழிகாட்டல்
அ. சங்க இலக்கியம் அனைத்தையும் இணைக்கும் முறையை கண்டுபிடிக்க வேண்டும்.
ஆ. புலவர்கள் ஓலைச்சுவடி ஆய்வாளர்கள் உதவி.

4. நிதி மற்றும் பொதுப்பங்களிப்பு
அ. இப்படிப் பட்ட கோயில் தனிப்பட்ட விருப்பமாக மட்டும் இல்லாமல், தமிழர் பண்பாட்டு பெருமையாக அமையும்.
ஆ. அதனால் பொதுமக்களிடம், கலை மற்றும் பண்பாட்டு அறக்கட்டளைகளிடம் உதவி பெறலாம்.

அரட்டைச்சேயிழையின் அடுத்த ஒரு வினா:
நீங்கள், சங்கத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரிய அடிப்படையில் ஒரு 'புதிய' கோயில் அமைக்க நினைக்கிறீர்களா? 

எனது விடை: 
சங்கத் தமிழின் பாரம்பரிய அடிப்படையில் ஒரு புதிய கோயில் அமைக்க நினைக்கின்றேன்

அருமையான எண்ணம்!
இது வெறும் ஒரு கோயில் கட்டுவது அல்ல. தமிழின் சங்கப் பாரம்பரியம், இயல்கணக்கு, கலை, வரலாறு- இவை அனைத்தையும் மீட்டெடுத்து மக்கள் முன் நிறுத்தும் மிகப் பெரிய பண்பாட்டு பணி.

ஐந்திணைக் கோயில் அமைக்கும் வழிமுறை:
1. தொலைநோக்குடன் அமைத்தல்
அ. இந்தக் கோயில் சாதாரண கோயிலாக அல்லாமல், சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட ஐந்திணைத் தெய்வங்களை ஒரே தலத்தில் வணங்கும் இடமாக அமைய வேண்டும்.
ஆ. தமிழ் பண்பாட்டுக் களஞ்சியமாகவும் விளங்க வேண்டும்.

2. ஐந்து கோயில்கள் சங்க இலக்கியம் அடிப்படையில்:
அ. குறிஞ்சி நிலம்- சேயோன் (மலைக்கோயில் வடிவம்)
ஆ. முல்லை நிலம்- மாயோன் (காடு அல்லது தாழ்வான நிலம்)
இ. மருத நிலம்- மன்னன் (வயல் மற்றும் செழிப்பு குறிக்கும்)
ஈ. பாலை நிலம்- கொற்றவை (வறண்ட நிலம், வீர வடிவம்)
உ. நெய்தல் நிலம்- வருணன் (கடற்கரை, அலை வடிவக் கோயில்)

இவ்வாறு ஒவ்வொரு கோயிலும் அந்தந்த நிலத்தோற்றத்தை பிரதிபலிக்கும் கட்டமைப்பில் அமைக்கலாம்.
எடுத்துக்காட்டு; சேயோன் கோயில் மலை வடிவ கற்பாறை போன்றது. வருணனுக்கான கோயில் அலை வடிவக் கல் கொண்டு வடிவமைக்கலாம்.

3. கலை மற்றும் கட்டிடக்கலை
அ. தருமபுரம், மதுரை, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் காணப்படும் தமிழ்ச் சிற்பக்கலை வடிவங்கள் சேர்க்கலாம்.
ஆ. கோயில்களில் சங்கச் சின்னங்கள் முதலை, புலி, மீன், வில்லும் அம்பும், பரந்தை மரம் போன்றவை பொறிக்கலாம்.

4. இயல்கணக்கு நடைமுறை
அ. சங்க கால வழிபாடு (மலர், புல், பாடல், பரிசல்) சேர்த்துப் பின்பற்றலாம்.
ஆ. சங்க இலக்கியத்தில் வரும் பாடல்களைத் திருப்பாடல்களாகப் பயன்படுத்தலாம்.

5. பண்பாட்டு மையம்:
கோயில் வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்ல,
அ. சங்க இலக்கிய அரங்கம்
ஆ. இசைத்தமிழ், நாட்டிய விழாக்கள்
இ. பழமையான கைவினைக் கலைகள் கண்காட்சி
ஈ. ஆய்வு மையம் 
இவற்றைச் சேர்த்து, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பெருமையாக நிற்கும் தலமாக மாற்றலாம்.

6. நிதி அமைப்பு
அ. ஐந்திணைக் கோயில் அறக்கட்டளை அமைத்துக் கொள்ளுங்கள்.
ஆ. உலகத் தமிழர்களிடமிருந்து பங்களிப்பு பெறலாம்.
இ, அரசு மற்றும் கலை, பண்பாட்டு கலாச்சார அமைப்புகள் மற்றும் யுனெஸ்கோ ஆதரவைப் பெற முயலலாம்.

இது உண்மையிலேயே நடந்தால், தமிழகத்தில் முதன்முறையாக சங்க இலக்கிய அடிப்படையில் கட்டப்பட்ட கோயிலாக இருக்கும். அது உறுதியாக வரலாற்று பெருமையைப் பெறும்.
வாழ்த்துக்கள்.

உங்களுக்கு, எது எதில் இயக்கமின்மையாக அமைய முடியுமே, அவற்றில் எல்லாம் நீங்கள் இயக்கமின்மையாக இருந்தால், உங்கள் மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உடன் பிறப்புகள், சொந்த பந்தம், நட்பு, தொழில் வணிகம் தனித்திறன் வேளாண்மை போன்ற உடைமைக் குவிப்புத் தளத் தொடர்புகள், முழுக்க முழுக்க உரிமை சார்ந்த வேலைத்தள தொடர்புகள் ஆகியவற்றிடம் உங்கள் சீரான இயக்கத்திற்கான இயக்கமின்மையைக் கடவுள் உறுதியாகப் பெற்றுத்தரும்.

எல்லோருமே எனக்கான இயக்கமின்மையாக அமைய வேண்டும் என்று கருதுவது பாகுபாட்டியல் ஆகும். அந்தப் பாகுபாட்டியலை கற்பிக்கும் தளங்களாக பிராமணியம், அராபியம், ஐரோப்பயம், உலகமதங்கள் பாடாற்றி வருகின்றன. இது தீர்வு அல்ல. இதை எதிர்த்து முரண்பாட்டியல் போராடிக் கொண்டே இருக்கும்.

உலக அளவில் அனைத்திற்கும் எதிரான மார்க்சியமும், இந்தியாவில் பிராமணியத்திற்கு எதிரான திராவிடமும், தமிழ்நாட்டில் திராவிடத்திற்கு எதிரான தமிழ்த்தேசியமும் பேணப்பட்டு வருகிற முரண்பாட்டியல்கள் ஆகும். முரண்பாட்டியலில் போராடுகிறவனுக்கு உரிமை அகலப்படுத்தப்படுகிறது. அகலப்படுத்தப்பட்ட உரிமையும் போராடுகிறவனுக்கே,  கிடைக்காமல் அவன் கூட்டத்திற்கே கிடைக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.