Show all

நான்மறை, ஐந்திரம் இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்ன

தமிழியல் மற்றும் மந்திரம் ஆசிரியர் இளந்தமிழ்வேள் அவர்கள் தொடுத்த ஒரு நுட்பமான வினாவிற்கு விடை அளிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

24,தை,தமிழ்த்தொடராண்டு-5126: 

நான்மறை, ஐந்திரம் இரண்டிலுமே- நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கையும் பட்டியல் இட்டுள்ளனர் தமிழ்முன்னோர். நான்மறையை நாற்திரம் என்று சொல்லுவது பிழை ஆகுமா? 

நான் மறையில் ஏன் விசும்பைத் தமிழ்முன்னோர் பட்டியல் இடவில்லை. நிலம் நீர் தீ காற்றோடு விசும்பையும் சேர்த்து ஐம்மறை என்று சுட்டுவது பிழை ஆகுமா? 

பஞ்சபூதம் என்கிற வடமொழிச்சொல்லில் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்தும் குறிப்பிடப்படுகிறதே? ஆனால் வடமொழியாளரிடம் நான்மறை என்பதற்கு நேரான சொல் இருக்கவில்லையே? அது ஏன்? 

பிரபஞ்சம் என்பதற்கு பெரிய ஐந்து என்றுதானே பொருள் அந்தப் பெரிய ஐந்துகள் யாவை? 

மொத்தத்தில், நான்மறை, ஐந்திரம் இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்ன என்பதாக பல்வேறு வினாக்களை எழுப்பி, விடைகளைப் பகிர்ந்து கொண்டோம், தமிழியல் மற்றும் மந்திரம் ஆசிரியர் இளந்தமிழ்வேள் அவர்களும் நானும்.

மந்திரம், இயல்கணக்கு, கடவுள், இறை, தெய்வம், இறத்தல், காலமாதல், உலகத்தோற்றம் போன்ற தலைப்புகளை எனது கட்டுரைகளில் படித்து முடித்தவர்களுக்கு, இந்தக் கட்டுரை எளிதாகப் புரியும். மற்றவர்கள் அந்தத் தலைப்புகளைப் புரிந்து கொள்ளும் வகைக்கு உரிய கட்டுரைகளைப் படித்து முடித்துவிட்டு இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

நான்மறையை நாற்திரம் என்று சொல்லுவது பொருந்தாதுதான். 

நிலம் நீர் தீ காற்றோடு விசும்பையும் சேர்த்து ஐம்மறை என்று சுட்டுவதும் பொருந்தாதுதான்.

நான்மறை என்பது பொருள்பொதிந்த தமிழ்ச்சொல் மட்டுமே. நான்மறை என்கிற சொல்லில் தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருளில் உலகில் எந்த மொழியும் சொல் கொண்டிருக்கவில்லை.

ஐந்திரம் என்கிற தமிழ்ச்சொல்லின் சமஸ்கிருதவாக்கமே பிரபஞ்சம். 

நான்மறையில் இருக்கிற நிலம், நிர், தீ, காற்று ஆகிய நான்கும் இயல்அறிவில் படிக்கிற அவைகளின் இயல்புகள் பற்றியது ஆகும். இயல்அறிவுக்கான ஆங்கிலச்சொல் சயின்ஸ்.

நியுட்டன் மூன்றாவது விதி- எவ்வரி ஏக்சன் தேர் ஈஸ் ஏன் ஈகுவல் ஆண்டு ஆப்போசிட் ரியாக்சன் என்று பேசும். அனால் அந்த ரியாக்சன்- ஏன்? எப்படி? எதனால்? என்பது குறித்து ஐரோப்பிய இயல்அறிவு அறியாது.

தமிழ் முன்னோர் அந்த ரியாக்சனை விசும்பின் முயக்கம் என்று தெளிவு படுத்துகின்றனர்.

விசும்பு: இயக்கமும் எல்லையும் இல்லாத வெளியின் மூன்றாவது நிலை என்பதை நாம் மேலே குறிப்பிட்ட மந்திரம், இயல்கணக்கு, கடவுள், இறை, தெய்வம், இறத்தல், காலமாதல், உலகத்தோற்றம் போன்ற தலைப்புகளுக்கான கட்டுரைகளைப் படித்தவர்களுக்கு எளிதாகப் புரியும்.

நான் மறைகள் ஆக இருக்கிற நிலம், நீர், தீ, காற்று ஆகியன முதலெனப்படுவது இடமும் காலமும் என்று தமிழ்முன்னோர் நிறுவியதில் காலம் மட்டுமே ஆகும். 

இடம் என்பது வெளி. வெளி- தான்தோன்றி இயக்கமோ, எல்லையோ அற்றது. அது இல்லாத ஒன்று. அதை நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு மறைகளோடு பட்டியல் படுத்த முடியாது.

காலத்தி;ன் முதலாவதான தனிஒன்றுகளின் தொடர் இயக்கத்தால், கிடைத்திட்ட, எண்ணிக்கை மாற்றத்தால் மாறுபட்ட நான்கு கூட்டியக்கங்கள் ஆன நிலம், நீர், தீ, காற்று. 

நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றை, மாறுபட்ட எண்ணிக்கைகளில் மறைபொருட்களாக கொண்டு உருவானவைகளே கோள்களும், கோள்களில் ஒன்றான புவியும், புவியில் இமயச்சாரலில் உருவான நிலவாழ் உயிரிகளும், அவற்றின் உள்ளடக்கமான நீங்கள் நான் எல்லாம்.

இடமான வெளியைத் தனியாகவும், நீங்கள் நான் உள்ளிட்ட இயங்கும் இயற்கையைத் தனியாகவும் பார்க்கிற போது, இடத்தை விசும்பு என்றும், நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கையும் நான்மறைகள் என்றும் நிறுவினர் தமிழ்முன்னோர்.

விசும்பில் நான்மறை இயங்குகிறது. நான்மறையின் இயக்கத்தைப் பெற்று நான்மறையை முயக்குகிறது விசும்பு. இங்கேதான் இந்த ஐந்துக்கும் திரம் என்கிற குவிக்கப்பட்ட ஆற்றல் அமைகிறது. திரம் உடைய நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்தும் ஐந்திரம் என்கிற ஒற்றைத் தலைப்பில் தமிழ்முன்னோரால் பட்டியல் இடப்படுகிறது.

விசும்பு குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல்தான் உலகினர் சயின்ஸ் என்கிற இயல்அறிவைக் கட்டமைத்துப் பாடாற்றி வருகின்றனர்.  

நியுட்டன் தன் மூன்றாவது விதியான, எவ்வரி ஏக்சன் தேர் ஈஸ் ஏன் ஈகுவல் ஆண்டு ஆப்போசிட் ரியாக்சன் என்பதில் விசும்பை உணர்ந்;திருக்கிறார். அனால் அந்த ரியாக்சன் ஏன்? எப்படி? எதனால்? என்பது குறித்து ஐரோப்பிய இயல்அறிவு இன்று வரை முயலவில்லை.

ஆக நான்மறையில் இருக்கிற நிலம், நீர், தீ, காற்று ஆகியன இயல்அறிவு என்கிற தலைப்பில் அறியப்படுவது.

ஆனால் ஐந்திரம் என்கிற விசும்போடு திரமாக அமைகிற நிலம், நீர், தீ, காற்று இயல்கணக்கு என்கிற தலைப்பில் கணிக்கப்படுவது.

'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி' என்பது சேர அரசர் ஐயனாரிதனார் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள ஓர் அடி.

இயற்கையான மலைநிலம் தோன்றி, நீர் மேலாண்மை குறித்த செயற்கையான கரிகாலன் கல்லணை கண்ட மண்நிலம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பே அதற்கான கருவிகள் ஆன வாளை, முல்லை நிலக் காட்டுவாழ்க்கையிலேயே உருவாக்கிக் கொண்ட மூத்த இனம் தமிழினம் என்றுபெருமை கொண்டாடுவது இயல்அறிவு தலைப்பில் அமைகிற நான்மறைப் பயன்பாடும் அறிவும் ஆகும்.

ஆனால் ஐந்திணை வாழ்க்கை முறைக்கு ஐந்திரங்களின் மாண்பைக் கொண்டாட, மனத்தில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த கலையான ஐந்தாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தை உருவாக்கியது ஐந்திரப் பயன்பாடும் கணக்கும் ஆகும்.

நமது குடும்ப முன்னேற்றத்திற்காக நாம் அன்றாடம் ஓதி வருகிற காப்பு மந்திரத்தில், ஐந்திரங்களுக்கும் உரிய மாண்புகளைத் தமிழ்முன்னோர் கணித்திட்ட அடிப்படையில்தாம் பொருத்திப் பயன்படுத்தி வருகிறோம்.

நான்மறை என்கிற பட்டியல் நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றின் இயல்பு பற்றியது ஆகும்.

ஐந்திரம் என்கிற பட்டியல் விசும்பின் முயக்கத்தோடு, விசும்பின் முயக்கத்திற்குக் காரணம் ஆன நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றின் இயக்கம் பற்றியது ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,247. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.