Show all

கொண்டாடுவோம்! முந்தை எழுபிறப்பை. எட்டுவோம் உச்சம்! பிந்தை எழுபிறப்பில்

உலக மதங்கள் எதுவும் மறுபிறவி என்கிற தலைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஹிந்து மதம் பேரளவான புனைவுகளோடு (மகத்துவம்) மறுபிறவியைக் கொண்டாடுகிறது. அதற்கு அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களோடு கலந்து வாழ்வதும், தமிழரின் ஐந்திணை வாழ்க்கை முறை மறுபிறப்பு பற்றிய செய்திகளை பேரளவாக கொண்டிருப்பதும் காரணம் ஆகும் என்று தெரிவிப்பதற்கும், நாம் நமது எழுபிறப்பை புரிந்துகொண்டு, கொண்டாடுவதற்குமாக முன்னெடுக்கப்படுகிறது இந்தக் கட்டுரை. 

27,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5125. 

இந்தியாவில் இன்றுவரை பேரளவினராக வாழும் இனங்களில் ஒன்று தமிழினம். இரண்டு பிராமண இனம். இந்த இரண்டு இனங்களுக்கும் மதம் கிடையா. தமிழினத்திற்கு ஐந்திணை வாழ்க்கை முறை உண்டு. 

பிராமண இனத்திற்கு முந்தை பாஷ்து மொழியில் தொடங்கி நடப்பு ஹிந்தி மொழிவரை, ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று அவர்கள் நாடோடியாக அலைந்த வகைக்குப் பெற்ற, மாறுபட்ட பல மொழிகளும், மாறுபட்ட பல கலாச்சாரங்களும் உண்டு. இந்தக் கலவைக் கலாச்சாரத்திற்கு ஹிந்தி என்கிற கலவை மொழியைத் தந்தவர்களும், இந்தக் கலவை கலாச்சாரத்திற்கு ஹிந்து என்கிற மதத் தலைப்பைத் தந்தவர்களும் முகமதியர்கள் ஆவார்கள்.

வட இந்திய மக்களின் வாழ்க்கை முறைக்கு, முகமதியர்கள் இட்ட பெயரான ஹிந்துவை இன்று வரை மதம்கொண்டிராத தமிழினத்திற்கும், நம்மை ஆண்டிருந்த பிரித்தானியர்கள் நீட்டித்தார்கள். 

இதனால் பிறக்கும் ஒவ்வொரு தமிழனும் தமிழனாகவோ ஐந்திணை வாழ்க்கை முறைக்குச் சொந்தக்காரனாகவோ அறியப்படாமல் ஹிந்து மற்றும் அதன் தமிழ்ஒலிப்பு இந்துவாக அறியப்படுகிற அவலம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.

உலக மதங்கள் எதுவும் மறுபிறவி என்கிற தலைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஹிந்து மதம் பேரளவான புனைவுகளோடு (மகத்துவம்) மறுபிறவியைப் பேரளவாகக் கொண்டாடுகிறது. 

இதற்கு, தமிழரின் ஐந்திணை வாழ்க்கை முறை மறுபிறப்பு பற்றிய செய்திகளைப் பேரளவாக கொண்டிருப்பதே காரணம் ஆகும். 

ஆனால் தமிழ்முன்னோர் கொண்டாடும் பிறவிகள் புனைவுகளால் கட்டமைக்கப்பட்டது அல்ல. உயிரிகளில் மனித இனத்தில் இயல்பூக்கமாக அமைந்த தலைமுறைகளே ஆகும். அதைக் கீழே அமைந்த ஒன்பது குறள்களையும் ஒப்புநோக்கி எளிதாகத் தெளிவடைய முடிகிறது.

அதிகாரம்: கடவுள்வாழ்த்து. குறள்: 10
பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.

அதிகாரம்: அறன் வலியுறுத்தல். குறள்: 38.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

அதிகாரம்: மக்கட்பேறு. குறள்: 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

அதிகாரம்: செய்நன்றி அறிதல். குறள்: 107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

அதிகாரம்: அடக்கமுடைமை. குறள்: 126 
ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கலாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து 

அதிகாரம்: மெய்யுணர்தல். குறள்: 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

அதிகாரம்: கல்வி. குறள்: 398
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி  ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து 

அதிகாரம்: பொச்சாவாமை. குறள்: 538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

அதிகாரம்: பேதைமை. குறள்: 835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அன்று 

அது மட்டும் அல்லாமல் தமிழ்முன்னோரால் ஒவ்வொரு தமிழனுக்கும் எழுபிறப்புக் கணக்கு வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதையும், திருக்குறள் பேரளவாக எழுமையைக் கொண்டாடுவதில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

நடப்பு தமிழ்த் தொடராண்டு 5125. கடந்த 5124 ஆண்டுகளாகவும் காலக்கணக்கு மிகச்சிலரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது தமிழர்களுக்கான பொது என்கிற நிலையில் சாத்தியமாகி வருகிறது.

ஒவ்வொரு தமிழனுக்கும் தனித்தனி கணக்கான எழுபிறப்பு- தலைப்பாக இருந்து கொண்டிருக்கிறதே அன்றி, அது தலைமுறைக் கணக்கு என்கிற புரிதலோ, அதைக் கணக்காக யாரும் முன்னெடுப்பதோ இல்லை.

எழுபிறப்புக் கணக்கை தமிழினம் கொண்டாடியிருந்தது, தம்மின் தம்மக்கள் அறிவுடைமையை வளர்ப்பதற்கான காரணம் பற்றியது ஆகும். காலமான நம்முன்னோர், கூட்டியக்கச் சுழியமாக, பட்டறிவுத்தரவாக, நூலாக, கடவுள் நூலகத்தில் அமைந்திருக்கின்றனர் என்கிற காரணம் பற்றியது ஆகும். நாம் அவர்களைக் கொண்டாடும் போது, கடவுள் முயக்கத்தால், நம் முன்னோர்களுடைய அறிவு நமக்கு ஒருங்கிணைத்துத் தரப்படும் என்கிற காரணம் பற்றியது ஆகும்.

முதலாவது தலைமுறையில்:
நான்.

இரண்டாவது தலைமுறையில் இரண்டு உயிர்கள்: 
உயிர்1- அம்மா 
உயிர்2- அப்பா 
                
மூன்றாவது தலைமுறையில் நான்கு உயிர்கள்: பாட்டிகள் இருவர் பாட்டன்கள் இருவர்.
உயிர்3- உயிர்1இன் அம்மா 
உயிர்4- உயிர்1இன் அப்பா 
உயிர்5- உயிர்2இன் அம்மா 
உயிர்6- உயிர்2இன் அம்மா

நான்காவது தலைமுறையில் எட்டு உயிர்கள்: பூட்டிகள் நால்வர். பூட்டன்கள் நால்வர்.
உயிர்7- உயிர்3இன் அம்மா
உயிர்8- உயிர்3இன் அப்பா
உயிர்9- உயிர்4இன் அம்மா
உயிர்10- உயிர்4இன் அப்பா
உயிர்11- உயிர்5இன் அம்மா
உயிர்12- உயிர்5இன் அப்பா
உயிர்13- உயிர்6இன் அம்மா
உயிர்14- உயிர்6இன் அப்பா

ஐந்தாவது தலைமுறையில் 16 உயிர்கள் 8 ஓட்டிகள் 8 ஓட்டன்கள்.
உயிர்15- உயிர்7இன் அம்மா
உயிர்16- உயிர்7இன் அப்பா
உயிர்17- உயிர்8இன் அம்மா
உயிர்18- உயிர்8இன் அப்பா
உயிர்19- உயிர்9இன் அம்மா
உயிர்20- உயிர்9இன் அப்பா
உயிர்21- உயிர்10இன் அம்மா
உயிர்22- உயிர்10இன் அப்பா
உயிர்23- உயிர்11இன் அம்மா
உயிர்24- உயிர்11இன் அப்பா
உயிர்25- உயிர்12இன் அம்மா
உயிர்26- உயிர்12இன் அப்பா
உயிர்27- உயிர்13இன் அம்மா
உயிர்28- உயிர்13இன் அப்பா
உயிர்29- உயிர்14இன் அம்மா
உயிர்30- உயிர்14இன் அப்பா

ஆறாவது தலைமுறையில் 32 உயர்கள் 16 சேயோள்கள் 16 சேயோன்கள்
உயிர்31- உயிர்15இன் அம்மா
உயிர்32- உயிர்15இன் அப்பா
உயிர்33- உயிர்16இன் அம்மா
உயிர்34- உயிர்16இன் அப்பா
உயிர்35- உயிர்17இன் அம்மா
உயிர்36- உயிர்17இன் அப்பா
உயிர்37- உயிர்18இன் அம்மா
உயிர்38- உயிர்18இன் அப்பா
உயிர்39- உயிர்19இன் அம்மா
உயிர்40- உயிர்19இன் அப்பா
உயிர்41- உயிர்20இன் அம்மா
உயிர்42- உயிர்20இன் அப்பா
உயிர்43- உயிர்21இன் அம்மா
உயிர்44- உயிர்21இன் அப்பா
உயிர்45- உயிர்22இன் அம்மா
உயிர்46- உயிர்22இன் அப்பா
உயிர்47- உயிர்23இன் அம்மா
உயிர்48- உயிர்23இன் அப்பா
உயிர்49- உயிர்24இன் அம்மா
உயிர்50- உயிர்24இன் அப்பா
உயிர்51- உயிர்25இன் அம்மா
உயிர்52- உயிர்25இன் அப்பா
உயிர்53- உயிர்26இன் அம்மா
உயிர்54- உயிர்26இன் அப்பா
உயிர்55- உயிர்27இன் அம்மா
உயிர்56- உயிர்27இன் அப்பா
உயிர்57- உயிர்28இன் அம்மா
உயிர்58- உயிர்28இன் அப்பா
உயிர்59- உயிர்29இன் அம்மா
உயிர்60- உயிர்29இன் அப்பா
உயிர்61- உயிர்30இன் அம்மா
உயிர்62- உயிர்30இன் அப்பா

ஏழாவது தலைமுறையில் 64 உயிர்கள் 32 பரைகள் 32 பரன்கள்
உயிர்63- உயிர்31இன் அம்மா
உயிர்64- உயிர்31இன் அப்பா
உயிர்65- உயிர்32இன் அம்மா
உயிர்66- உயிர்32இன் அப்பா
உயிர்67- உயிர்33இன் அம்மா
உயிர்68- உயிர்33இன் அப்பா
உயிர்69- உயிர்34இன் அம்மா
உயிர்70- உயிர்34இன் அப்பா
உயிர்71- உயிர்35இன் அம்மா
உயிர்72- உயிர்35இன் அப்பா
உயிர்73- உயிர்36இன் அம்மா
உயிர்74- உயிர்36இன் அப்பா
உயிர்75- உயிர்37இன் அம்மா
உயிர்76- உயிர்37இன் அப்பா
உயிர்77- உயிர்38இன் அம்மா
உயிர்78- உயிர்38இன் அப்பா
உயிர்79- உயிர்39இன் அம்மா
உயிர்80- உயிர்39இன் அப்பா
உயிர்81- உயிர்40இன் அம்மா
உயிர்82- உயிர்40இன் அப்பா
உயிர்83- உயிர்41இன் அம்மா
உயிர்84- உயிர்41இன் அப்பா
உயிர்85- உயிர்42இன் அம்மா
உயிர்86- உயிர்42இன் அப்பா
உயிர்87- உயிர்43இன் அம்மா
உயிர்88- உயிர்43இன் அப்பா
உயிர்89- உயிர்44இன் அம்மா
உயிர்90- உயிர்44இன் அப்பா
உயிர்91- உயிர்45இன் அம்மா
உயிர்92- உயிர்45இன் அப்பா
உயிர்93- உயிர்46இன் அம்மா
உயிர்94- உயிர்46இன் அப்பா
உயிர்95- உயிர்47இன் அம்மா
உயிர்96- உயிர்47இன் அப்பா
உயிர்97- உயிர்48இன் அம்மா
உயிர்98- உயிர்48இன் அப்பா
உயிர்99- உயிர்49இன் அம்மா
உயிர்100- உயிர்49இன் அப்பா
உயிர்101- உயிர்50இன் அம்மா
உயிர்102- உயிர்50இன் அப்பா
உயிர்103- உயிர்51இன் அம்மா
உயிர்104- உயிர்51இன் அப்பா
உயிர்105- உயிர்52இன் அம்மா
உயிர்106- உயிர்52இன் அப்பா
உயிர்107- உயிர்53இன் அம்மா
உயிர்108- உயிர்53இன் அப்பா
உயிர்109- உயிர்54இன் அம்மா 
உயிர்110- உயிர்54இன் அப்பா
உயிர்111- உயிர்55இன் அம்மா
உயிர்112- உயிர்55இன் அப்பா
உயிர்113- உயிர்56இன் அம்மா
உயிர்114- உயிர்56இன் அப்பா
உயிர்115- உயிர்57இன் அம்மா
உயிர்116- உயிர்57இன் அப்பா
உயிர்117- உயிர்58இன் அம்மா
உயிர்118- உயிர்58இன் அப்பா
உயிர்119- உயிர்59இன் அம்மா
உயிர்120- உயிர்59இன் அப்பா
உயிர்121- உயிர்60இன் அம்மா
உயிர்122- உயிர்60இன் அப்பா
உயிர்123- உயிர்61இன் அம்மா
உயிர்124- உயிர்61இன் அப்பா
உயிர்125- உயிர்62இன் அம்மா
உயிர்126- உயிர்62இன் அப்பா

இந்த ஏழு தலைமுறைகளையே பரன்பரை (பரம்பரை) என்று சுட்டிச் சென்றனர் தமிழ்முன்னோர்.

எழுபிறப்புக் கணக்கை- எனக்கும், என் தலைவிக்கும், என் மகளுக்கும், என் மகனுக்கும், என் மகள்வழி பேத்திக்கும், பேரனுக்கும், என்மகன் வழி பேத்திகள் இருவருக்கும் எழுதி வைத்துள்ளேன். 

என்எழுபிறப்புக் கணக்கில், என் அம்மா அப்பா பெயர்களோடு அவர்களின் அம்மா அப்பாக்களான என் பாட்டி பாட்டன்களின் பெயர்களையும் பட்டியல் இட முடிகிறது. எனது நான்காவது தலைமுறையினரான பூட்டி பூட்டன்களின் பெயரை நான் அறிந்திராத காரணத்தினால் அவர்களின் பெயர்களைப் பட்டியலிட எனக்கு வாய்க்கவில்லை.

ஆனால் என் மகள் மகனின் எழுபிறப்புக் கணக்கில் நான்காவது தலைமுறையினர்களான பூட்டி, பூட்டன்களின் பெயர்களை பதிவிடும் வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

என் நான்கு பேரப்பிள்ளைகளின் எழுபிறப்புக் கணக்கில் ஐந்தாவது தலைமுறையினர்களான ஓட்டி. ஓட்டன்களின் பெயர்களையும் பட்டியல் இட முடிகிறது. 

என் ஆறாவது தலைமுறை சேயோள் சேயோன் பெயர்களை என் கொள்ளுப் பேத்தி பேரன்களும் 
என் ஏழாவது தலைமுறை பரை பரன்களின் பெயரை என்  எள்ளுப் பேரன் பேத்திகளும் 
முன்னெடுத்து எட்டுவார்கள் உச்சம்! பிந்தை எழுபிறப்பில் என்கிற உறுதியை இந்தப் பதிவு எனக்குள் விதைத்துள்ளது. 

இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஓர் ஆயிரம்பேர்கள் தங்கள் முந்தை எழுபிறப்பை பட்டியலிடப் பாடாற்றினாலே தமிழினத்தை உலக அளவில் உச்சம் தொடவைக்கும் வழி திறந்துவிடும். தமிழினம் உறுதியாக உச்சம் தொட முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,856.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.