Show all

உலக வங்கி இந்தியா குறித்து, நேற்று வெளியிட்ட அதிர்ச்சிக் கணிப்பு! நடப்பு ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் வளருவதற்கு சாத்தியமில்லை.

இந்தியாவில் கடன் வாங்கும் மக்களை தகுதி தரம் பாராட்டும் அமைப்பு சிபில் போல, இந்தியாவின் தகுதி தரம் பாராட்டும் அமைப்பு உலக வங்கி. அது இந்தியாவிற்கு நடப்பு ஆண்டிற்கு பொருளாதார முன்னேற்றம் சாத்தியப்படாது என்று தெரிவித்துள்ளது. 

27,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிபில் என்று சுருக்கமாக அழைக்கப்படும், இந்தியாவின் கடன் தகவல் நிறுவனம் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய பணி கடன் பெறுபவர்கள், கடன் அட்டை பயன்படுத்துபவர்கள் ஆகியோர் குறித்த தகவல்களைத் திரட்டி அவர்களின் நேர்மையை அளவிட்டு அதை தரப் புள்ளிகளாக வழங்குவதே ஆகும். 

வங்கிகள், நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களை மாதந்தோரும் இந்த நிறுவனத்திற்கு தெரிவிக்கவேண்டும். இந்தப் புள்ளி விவரங்கள் மூலம் ஆபத்து குறைந்த கடன்களை வழங்க முடியும் என்று வங்கிகள் கருதுகின்றன. அதாவது வாங்கிய கடனை திரும்பக் கட்டும் பழக்கம் உடைய நல்ல வாடிக்கையாளர்களைப் பெறுவதே இந்த அமைப்பின் நோக்கம்.

அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த நாள், செல்பேசி எண், அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை – எல்லைக்கடவு - ஓட்டுனர் உரிமம் - குடும்ப அடையாள – வருமான வரித்துறை அட்டை போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனைத் திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்தப் பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.

இந்திய வங்கிகள் கடன் கொடுப்பதற்கு உதவியாக, இந்தியாவின் தனிநபர்களின் தகுதி தரத்தைத் தீர்மானிப்பதற்கு இந்த நிறுவனம் பயன் படுகிறது. 

இது போல உலக நாடுகளுக்கு கடன் கொடுங்கும் வங்கி, உலக வங்கி எனப் படுகிறது. இந்த உலக வங்கிக்கு தன்னிடம் கடன் வாங்கும் நாடுகளின் தகுதி தரம் அறிந்து கொள்ள, இந்தியத் தனி நபர்களுக்கு சிபில் போல தனியாக நிறுவனம் இல்லா விட்டாலும் அந்த நிறுவன வேலையை உலக வங்கியே செய்து கொள்கிறது.

உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். 

இந்நிறுவனம்- இந்த நிறுவனத்திடம் கடன் வாங்கும் நாடுகளின் தகுதி, தரத்தை அவ்வப்போது பட்டியலிட்டு அசிங்கப் படுத்தும் வேலையைக் கடமையாகக் கொண்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான இந்தியா மீதான கணிப்பாக இந்தியப் பொருளாதாரம் வளராது என்று உலக வங்கி கணித்திருக்கிறது.
நடப்பு ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று உலக வங்கி கணித்திருக்கிறது.

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காடாக மட்டுமே இருக்கும் என்று உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணமதிப்பழிப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு மற்றும் சேவை வரி எனப் பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்த நடவடிக்கைகள் ஏராளம். இவற்றின் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வந்தாலும் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய முன்னேற்றம் தெரியவில்லை. இந்நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை உலக வங்கி குறைத்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9 விழுக்காடாக இருந்தது. நேற்று உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி வெறும் 6 விழுக்காடாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 விழுக்காடு எனவும் அதற்கு முந்தைய ஆண்டில் 7.2 விழுக்காடு இருக்கும் என்று உலக வங்கி கணித்திருந்தது.

இந்த ஆண்டின் நடப்பு காலாண்டில் தனியார் நுகர்வு மந்தமாகவும் தொழில் துறை, சேவைகள் துறை வளர்ச்சி குறைவாகவும் இருந்ததால் ஒட்டுமொத்த நிதியாண்டுக்கான வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்று உலக வங்கி தனது அண்மை அறிக்கையில் மதிப்பிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,305.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.