பாகிஸ்தான் இட்வார் பஜாரில் தேநீர்கடை யில் வேலை செய்யும் 18 அகவை அர்ஷத் கான் என்னும் இளைஞரின் வாழ்க்கையை சமூக வலைத்தளம் பிரபலப்படுத்தி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு மாற்றியமைத்துவிட்டது. சில நாட்கள் முன்பு ஜியா அலி என்னும் புகைப்படக்காரப் பெண் இவரை போட்டோ எடுத்து சுட்டுரை மற்றும் இன்ஸ்டாவில் பகிர்ந்ததும், அர்ஷத்தின் நீல நிற கண்கள், கூர்மையான பார்வை, இவரை ஒரே இரவில் பிரபலமாக்கிவிட்டது. Chaiwala என்னும் ஹேஷ்டேக்கில் இவர் புகைப்படங்கள் சுட்டுரையில் ட்ரெண்டாகிவிட்டது. பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அஷ்ரத், இரண்டு நாட்களாக என்னைச் சந்தித்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள நான் வேலை செய்யும் தேநீர் கடைக்கு நிறைய பேர் வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



