17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பிரபலமான வாட்சப் தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடிரென்று வேலை செய்யாமல் செயல் இழந்து போனதாகச் சொல்லப் படுகிறது. இந்தியா மற்றும் சில நாடுகளில் வாட்சப் திடிரென்று வேலை செய்யாமல் நின்று போனதாம். பலரும் இது குறித்து முகநூல், கீச்சு போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது தீயாகப் பரவி வருகிறது. இன்று மதியம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடிரென்று வாட்சப் செயலி வேலை செய்யாமல் நின்று போனதாம். அதன்படி நாம் அனுப்பும் தகவல்;கள் யாருக்கும் செல்லாமல், பிறர் அனுப்பும் தகவல்கள் நமக்கு வராமல் இருந்திருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சிலருக்கு வாட்சப் திறந்ததும் இணை என்ற செல் மட்டும் வந்து இருக்கிறது. இதையடுத்து குழம்பிப் போன வாட்சப் பயனாளர்கள் உடனடியாக முகநூல், கீச்சு போன்ற சமூக வலைத்தளங்களில் இது குறித்து விவாதம் செய்ய தொடங்கினார். அதில் உலகம் முழுக்க நிறைய பேருக்கு இந்தப் பிரச்சனை வந்தது தெரியவந்துள்ளது. அதன்படி இந்தியா, சிங்கப்பூர், ஐரோப்பா, வியட்நாம், ஈராக் ஆகிய நாடுகளில் வாட்சப் செயல் இழந்து இருக்கிறது. இந்தப் பிரச்சனை காரணமாக வாட்சப் நிறுவனம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறது. இதற்கு சரியான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. பலர் தனக்கு இந்த பாதிப்பு வந்ததாகத் தெரியவில்லை மறுக்கிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



