Show all

டிரம்புக்கு மீண்டும் கட்டிப்பிடி வைத்தியம் தேவைப்படுகிறது, மோடிவிரைக: ராகுல்

இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதேசமயம் பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரித்து வந்தார். தலைமை அமைச்சர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது மோடியும், அதிபர் டிரம்பும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களின் வாழ்த்துக்களை பரிமாறினர்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் பாகிஸ்தானுடன் திடீர் நெருக்கம் காட்டியுள்ளார். டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், பாக்., மற்றும் அதன் தலைவர்களுடனான உண்மையான உறவு தற்போதுதான் தொடங்கியிருப்பதாகவும், அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ராகுல் தனது கீச்சுப் பதிவில் தெரிவித்ததாவது:

மோடி அவர்களே விரையுங்கள்; அதிபர் டிரம்புக்கு மீண்டும் ஒருமுறை கட்டிப்பிடி வைத்தியம் தேவைப்படுகிறதுஎன கிண்டலடித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.