Show all

புதிது புதிதாக வாங்கி மகிழ்வோருக்கான மூன்றுவகை சியோமி மிடுக்குப் பேசிகள்

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரே ஒரு செல்பேசியை வாங்கி வைத்துக் கொண்டு அது பழுதாகிற வரை காத்துக் கொண்டிருக்கிறவர்கள் ஒரு சாரர்.

அவ்வப்போது புதிது புதிதாக செல்பேசி வாங்கி மகிழ்வோர் மற்றொரு சாரர். அந்த இரண்டாவது சாரரை இலக்காக கொண்டு மலிவு விலை செல்பேசிகளை சமீப கலமாக களம் இறக்கிக் கொண்டிருப்பது தான் சியோமி.

வருகிற 25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (11.11.2017) சியோமி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது போல் தெரிகிறது. இதுவரை வெளியான தகவல்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. அன்று சியோமி நிறுவனம் மொத்தம் மூன்று மிடுக்குப்பேசிகளை சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, ரெட்மீ 5, ரெட்மீ 5 ப்ளஸ் மற்றும் ரெட்மீ நோட் 5 ஆகிய மிடுக்குப்பேசிகள் வெளியாக வாய்ப்புள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது 999 யுவான் (அதாவது 151 அமெரிக்க டாலர்கள்) என்ற விலைப்புள்ளியையும்,

ரெட்மீ 5 மிடுக்;குப்பேசியில் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 3 ஜிபி ரேம் ஆனது 799 யுவான் என்ற புள்ளியையும் மற்றும் அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பானது 899 யுவான் (அதாவது 136 அமெரிக்க டாலர்கள்) என்ற புள்ளியை அடையலாம். என்று தகவல்கள் கசிந்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.