Show all

இந்தியாவில் வாழும் ரோஹிங்கியா மக்கள் மோடியின் மியான்மர் பயணத்தால் அதிர்ச்சி

இலங்கைக்கு ஆதரவாக நடுவண் அரசை முன்னெடுத்துச் சென்று ஈழத்தமிழர்களை ஒழித்துக் கட்ட வேதியியல் ஆயுதம் கொடுத்தது வரையான அனைத்திற்கும் காரணகர்த்தாவாக அமைந்தவர் ராஜிவ்காந்தி.

இன்றைக்கு மோடியின் நிலைபாடும் ரோஹிங்கியா முசுலீம்களுக்கு எதிராக நடுவண் அரசை முன்னெடுத்துச் சென்று தீராத பழிபாவத்திற்கு இந்தியாவை உட்படுத்தி விடுமோ என்று அஞ்சுகின்றனர். நடுநிலையாளர்கள்.

இந்தியாவில் வாழுகின்ற சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா மக்கள் அனைவரையும், இந்தியா நாடுகடத்தும் என்று இந்திய உள்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜி அறிவித்திருக்கிறார்.

செப்டம்பர் 5 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மியான்மரில் பயணம் மேற்கொள்ளுவதற்கு உகந்த சூழ்நிலையை அமைத்து கொடுக்கவே இந்தியாவின் இந்த அறிக்கை விடப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு தப்பியோடியுள்ளனர்.

இந்தியா ரோஹிங்கியா மக்களை நாடு கடத்தி மியான்மருக்கு அல்லது வங்கதேசத்திற்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறதா? அல்லது உண்மையிலே இது நடைபெறுமா? என்பதெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை.

ரோஹிங்கியா மக்களை நாடு கடத்துவதற்கு திட்டமிடும் அரசின் நடவடிக்கை தொடர்பாக இந்திய உச்ச அறங்கூற்று மன்றத்தில் இரண்டு ரோஹிங்கியர்களால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் மாநாடு முடிந்ததும் மோடி மியான்மர் செல்கிறார். மோடி இன்று மூன்று நாள் பயணமாக மியான்மர் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின் போது மோடி மியான்மரின் ஜனாதிபதி யூ ஹின்ன் க்யூவைச் சந்தித்து, வர்த்தகம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் எல்லை அமைதி உட்பட பல சிக்கல்களை விவாதிக்க உள்ளாராம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.