இந்த ஆண்டுக்கான மருத்துவதுறை நோபல் பரிசினை உடலின் உயிர்க் கடிகாரம் என்று அழைக்கப்படும் ‘பயலாஜிக்கல் க்ளாக்’ ஆனது பிரபஞ்ச இயக்கத்திற்கான செயல்பாடுகளுடன் ஒத்து அமைந்துள்ளது என்பதனை காட்டும் அடிப்படை மூலக்கூறுகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்தமைக்காக மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஜெப்ரி ஹல், மைக்கேல் ரோஸ்பேஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகிய மூவரே அந்த விருதினை பெறுபவர்களாவார்கள். விருதுத் தொகையான ரூ.7 கோடி இவர்கள் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. 2017-ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், நோபல் பரிசுக் குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அதனை அறிவித்தார். இன்னும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லா மருத்துவ நோபல் பரிசுகளும் இந்தியாவுக்குத்தான்; அதுதான் நீட் கொண்டு வந்தாச்சே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



