18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தனது மனைவி மெலானியாவுடன் ஆசிய சுற்றுப்பயணம் கிளம்பினார். இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. வெள்ளை மாளிகைக்குச் சுற்றிப்பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் கெடுபிடி அதிகரித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாளிகையில் இருந்து ட்ரம்ப் வெளியேறிய கொஞ்ச நேரத்திலேயே வளாகச் சுற்றுச்சுவர் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொண்ட மர்ம நபர் ஒருவர் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டார். இவர் மிரட்டினார் என்றும், சந்தேகத்துக்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அந்த மர்மநபர் கைது செய்யப்பட்டுள்ளதால் மாளிகையைத் தற்காலிகமாக மூடுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



