25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைத்திரி பால சிறிசேனாவின், இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார் ராஜபக்சே. இலங்கையில் ராஜபக்சே விரித்த வஞ்சக வலையில் விழுந்த சிறிசேனா, தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ரணில் விக்கிரம சிங்கேவை நீக்கிவிட்டு ராஜபக்சேவை தலைமை அமைச்சராகப் பதவியேற்றினார். ராஜபக்சே, நாடளுமன்றத்தில் தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க முயலாமல், நாடாளுமன்றத்தை கடந்த வெள்ளிக்கிழமை திடீரென கலைத்து அதிபர் சிறிசேனாவை உத்தரவிடச் செய்து தனது சதியின் அடுத்த கட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே, இலங்கையின் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார். மகிந்த ராஜபக்சேவுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 50 பேரும் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தனர். ராஜபக்சே, இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தால், ராஜபக்சேவின் கமுக்கமான யாரும் எதிர்பார்த்திராத வஞ்சகத்தால், அரசியல் அகதியாக்கப் பட்டுள்ளார் மைத்ரிபால சிறிசேனா! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,968.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.