26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்ம மோடி பெட்ரோலுக்கு அன்றாடம் விலை உயர்வுக்கு அனுமதித்ததைப் போல சவுதி அரேபியாவில் குடும்ப உறுப்பினர் மீதான கட்டணம் ஆண்டாண்டுக்கு இரட்டிப்பாக்கிக் கொள்ள சவுதி அரேபியா அரசாங்கம் வழி வகுத்திருக்கிறது. இதனால் சவுதி அரேபியாவில், பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற்றும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் குடும்பத்தோடு தங்கியுள்ளனர். ஆனால், சவுதி அரேபிய அரசு எடுத்த ஒரு முடிவு இப்போது குடும்பஸ்தர்களுக்கு பெரும் சுமையாகியுள்ளது. சவுதி அரேபியாவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், பல்வேறு வகையான சேவைகளுக்கும் வரி விதிப்பை அதிகரித்துள்ளது. ஆண்டு குடியிருப்பு கட்டணம் என்பது இதுவரை ஒரு குடும்பத்திற்கானதாக இருந்தது. இப்போது அதை தனி நபர்களுக்கானதாக மாற்றியுள்ளது சவுதி அரசு. குடும்பம் என்பதற்கு பதிலாக ஒவ்வொரு நபர்கள் மீதும் வரி விதிப்பு விதிக்கப்பட்டுள்ளதால், குடும்பஸ்தர்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. இதனால் மனைவி, குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்ப தொடங்கியுள்ளனர். தெலுங்கானா மக்கள் தாயகம் திரும்பி வருவதால் ஹைதராபாத்திலுள்ள பள்ளிகளில் விண்ணப்பங்கள் அதிக அளவுக்கு விற்று தீர்ந்துள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறுப்பினர் மீதான கட்டணம் எனபது தற்போது மாதம் 100 ரியாலாக உள்ளது. அது அடுத்த மாதம் முதல் 200 ரியாலாக உயர்த்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இந்தத் தொகை 300 ரியாலாகவும், அதற்கடுத்த ஆண்டு முதல் அது 400 ரியாலாகவும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குப்படி பார்த்தால், நான்கு பேரை கொண்ட ஒரு குடும்பம், ஆண்டுக்கு சராசரியாக ரூ.1.72 லட்சம் செலவிட வேண்டியிருக்கும். சவுதி அரேபியாவில் சம்பாதி;க்கலாம் என்று போனவர்கள், குடும்பத்தோடு சொகுசாக தங்க முயற்சித்தால், சம்பாதித்ததை அரசிடமே இழக்க சவுதி அரேபியா அரசு வழி வகை செய்திருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,813.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



