சம்பளம் மட்டும் இல்லாமல் குடியரசுத்;தலைவர்களும்,
பிரதமர்களும் வரி, இலவசம் என பல சலுகைகளை தங்களது பதவி காலத்தில் அனுபவிக்கின்றனர். அமெரிக்க
குடியரசுத்;தலைவர் தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000
டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியமாக பெறுகிறார். இங்கு
வழங்கப்பட்டுள்ள சம்பளம் 2015ம் ஆண்டின் தரவின் படி வழங்கப்படுகிறது. பராக் ஒபாமா 2016 ம் ஆண்டு வரை அமெரிக்க குடியரசுத்;தலைவராக
இருந்த பராக் ஒபாமா தன்னுடைய சம்பளமாக 4,00,000 டாலர்களைப் பெற்று வந்துள்ளார். இது
இந்திய மதிப்பில் 2.72 கோடியாகும். ஜஸ்டின் ட்ரூடியோ கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ 2015ம் ஆண்டு
வரை 2,60,000 டாலர்கள் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 1.77 கோடி
ரூபாய் ஆகும். அங்கேலா மேர்க்கெல் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் 2,34,400 டாலர்கள்
சம்பளமாக பெறுகிறார். இது இந்திய மதிப்பில் 1.59 கோடி ரூபாய் ஆகும். ஜேக்கப் ஜுமா தென் ஆப்ரிக்காவின் குடியரசுத்;தலைவர் ஜேக்கப் ஜுமா
2015 ஆம் ஆண்டு வரை 2,23,000 டாலர்கள் சம்பளமாக பெற்று வந்துள்ளார் அதாவது இந்திய மதிப்பில்
1.51 கோடி ரூபாயாகும். ஷின்சோ அபே ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே 2,03,000 டாலர்களை
சம்பளமாக 2015ம் ஆண்டு வரை பெற்றுவந்துள்ளார். அதாவது இந்தியமதிப்பில் 1.38 கோடி ரூபாயாகும். ரிசிப் தயிப் எர்டோகன் துருக்கியின் குடியரசுத்;தலைவர் ரிசிப் தயிப் எர்டோகன்
2015 ஆம் ஆண்டு வரை 1,97,000 கோடி சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய பதிப்பில்
1.3 கோடி ரூபாயாகும். பிரான்சுவா ஹாலண்ட் பிரஞ்சு குடியரசுத்;தலைவர் பிரான்சுவா ஹாலண்ட்
2015 ஆம் ஆண்டு வரை 1,94,000 டாலர் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில்
1.3 கோடி ரூபாயாகும். தெரேசா மே பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மேவின் சம்பளம்
1,78,250 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.2 கோடி ரூபாயாகும். விளாடிமிர் புட்டின் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் 1,36,000 டாலர்
சம்பளமாக பெற்று வந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 92 லட்சம் ரூபாய் ஆகும். மடியோ ரென்சியும் இத்தாலியின் பிரதம மந்திரி மடியோ ரென்சியும்
1,24,600 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 84 லட்சம் சம்பளமாக பெறுகிறார். ஜி ஜின்பிங்
சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் 22,000 டாலர் சம்பளம்
பெற்று வருகிறார் அதாவது இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாயாகும். நரேந்திர மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி 30,300 டாலர் சம்பளமாக
பெறுகிறார். இந்திய மதிப்பில் 20.63 லட்சம் ஆகும். ஆனால் நம்ம மோடிக்கு இந்திய மக்களின் வருமான வரி
வரம்பை இருபதாயிரத்துக்கு மேல் உயர்த்த முடியவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



