ஐ.நா-வின் பொதுஅவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சென்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாஸி. அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர், அணு ஆயுதங்களை முதன்முதலாகப் பயன்படுத்திய ஆசிய நாடுகளுள் பாகிஸ்தானும் ஒரு நாடாகும். பாகிஸ்தானால் அணு ஆயுதங்களைக் கையாள முடியும். அதற்கான முழுத் தகுதியையும் பாகிஸ்தானின் அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணையம் பெற்றுள்ளது. ஐ.நா அவை தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலமே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான நெடுங்கால பிரச்னை தீரும். அதனால் காஷ்மீர் குறித்த தீர்மானத்தை ஐ.நா விரைவில் நிறைவேற்ற வேண்டும். காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் என்றும் துணை நிற்கும். என்றார். மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தான் மிகப் பாதுகாப்பான முறையில் அணு ஆயுதங்களைக் கையாண்டு வருகிறது. அணு ஆயுதங்களால் ஏற்படும் கழிவுகளையும் பாதுகாப்பான முறையிலேயே அகற்றுவோம். இதன் மூலம் எதிர்க்கும் நாட்டைத் தாக்கும் அளவுக்குத் தயாராகவே உள்ளோம் என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



