குடும்பத்தினருடன் போதுமான நேரம் செலவிட முடியாத அளவுக்கு பணிச்சுமைகள் இருப்பதால் பிரதமர் பதவியையும், கட்சித்தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக நியூசிலாந்து பிரதமர் ஜான் கே அதிரடியாக அறிவித்துள்ளார். முக்கிய விசயங்களை அறிவிப்பு செய்வதாக கூறி நியூசிலாந்து பிரதமர் ஜான் கே இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றைநடத்தினார். அப்பொழுது அவர் கூறியதாவது: எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் போதுமான அளவு நேரம் செலவிட முடியாத அளவு பணிச்சுமைகள் இருப்பதால் பிரதமர் பதவியையும், தேசியக் கட்சித் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். நான் எடுத்த முடிவுகளிலேயே மிகவும் கடினமான முடிவு இதுதான். அடுத்து என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் அறிவித்தார். நியூசிலாந்து பிரதமராக ஜான் கே எட்டு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



