Show all

வக்கிரத்தின் உக்கிரம்! கிழிந்து தொங்கும் மைத்திரிபால சிறிசேனாவின் ஜனநாயக முகமூடி; வெளிப்படும் சிங்களப் பேரினவாத முகம்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரணில் விக்ரமசிங்கவுக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும், தலைமைஅமைச்சராக ஏற்கப் போவதில்லை என்ற அரசியல் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து வந்தார்.

எனினும், ஜனநாயக ரீதியாக நாடாளுமன்ற சம்பிரதாயத்தை ஏற்று ரணில் விக்ரமசிங்கவை தலைமை அமைச்சராக நியமித்ததாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலப்பிரச்சினைகளுடன் பார்க்கும்போது, எதிர்காலத்தில் இணைந்து பயணிப்பதற்கு எவ்வித உறுதியும் இல்லையென்றும் அதிபர் தெரிவித்தார்.

அந்தக் கடந்தகாலப் பிரச்சனைகள் என்ன? அவரே சொல்கிறார்:

கடாபியைப் போல் இழுத்துச் சென்று என்னைக் கொல்ல வேண்டும் என, என்னைக் கொல்ல முயற்சிப்பவர்களுக்கு எனது வீட்டுக் கதவு என்றும் திறந்தே இருக்கிறது என்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை இன்று சந்தித்தபோது அதிபர் இதனைக் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் பிக்குகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. முப்படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். இவற்றை செய்ய வேண்டாம் எனக் கூறினேன். இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சர்வதேசம் கூறுகிறது. ஆனால் எமது இராணுவத்தினரைக் கொன்ற பிரபாகரனின் தரப்பினருக்கு தண்டனை இல்லை. சர்வதேசம் எனக் கூறும் தரப்பினர் எம்மீது மட்டுமே குற்றங்களைச் சுமத்துகின்றனர். மனித உரிமைகள் மீறப்பட்டன, சர்வதேச போர் சட்டதிட்டங்கள் மீறப்பட்டன என்று இராணுவத்தினருக்கு எதிராக மட்டுமே விசாரணை நடத்தக் கோருகின்றனர்.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள விடுதலைப் புலிகளின் முதன்மையானவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து, தண்டனை வழங்கும் பொறிமுறையொன்று இல்லை. இதுகுறித்து யாரும் பேசுவதில்லை. இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்களாயின், பதுங்கியுள்ள விடுதலைப் புலி முதன்மையாளர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையெனில் சர்வதேசத்துடன் பேச்சு நடத்தி, குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்ள வேண்டும். 

(காலங்காலமாக, வெளிநாடுகளில் பணியில் இருந்த போதும் சொந்த தாயகத்தின் மீதான அனுதாபத்தில் இருக்கிற ஈழத்தமிழர்களைத்தான் பதுங்கியுள்ள விடுதலைப் புலி முதன்மையாளர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையெனில் சர்வதேசத்துடன் பேச்சு நடத்தி, பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இராணுவத்தினரின் மீதான குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் மைத்திரிபால சிறிசேனா.) 

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அப்படியெனில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரும் விடுவிக்கப்பட வேண்டும். இதுவே நியாயமானது.

என்னைக் கொல்ல நடந்ததாக கூறப்படும் சூழ்ச்சி குறித்த விசாரணைகளில் அலட்சியம் காட்டப்படுகிறது. என்னைக் கொல்ல வருகிறார்கள் என்று தெரிந்துகொண்டால் நான் நுழைவாயிலைத் திறந்துவைப்பேன். பாதுகாப்புத் தரப்பினரையும் விலகிக் கொள்வேன்.

(தன்னைக் கொல்வதற்கான ஒரு கூட்டத்;;தை பொய்யாக சித்தரித்து- தமிழர்களையும், அரசியல் எதிரிகளையும் கருவறுக்க நினைக்கிறார் மைத்திரிபால சிறிசேனா.)

இவ்வாறான நிலையில், எதிர்காலத்தில் சிங்களவர்களும், தமிழர்களும் இணைந்து, எவ்வாறு அரசாங்கத்தைக் கொண்டு செல்வது என்பது குறித்து விரிவாக கலந்துரையாட வேண்டியிருக்கிறது. எப்படி அரசாங்கத்தைக் கொண்டுசெல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இணைந்து பயணிப்பதில் எந்த உறுதியும் இல்லாமல் இருக்கிறது. முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. முரண்பாடுகள் அதிகரித்தால் நாடு வீழ்ச்சியை நோக்கிச் செல்லும். என்று தெரிவித்தார்.

ஒற்றைத் தமிழ்க் குழந்;தை கூட இலங்கையில் வாழமுடியாது என்கிற நிலைபாட்;டை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழர் ஆதரவுத் தமிழர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் பிடித்து வந்து கொல்லுவதற்கு உபாயம் வேண்டும் என்கிற வக்கிரம் தான் தனது நிலைபாடு என்பதை தெளிவாக்கியிருக்கிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா.

உலகம் இதை புரிந்து கொண்டு காய் நகர்த்த வேண்டும். அமைதி, நியாயம் விரும்பும் சிங்களப் பொதுமக்களும் இதைப் புரிந்து கொண்டு வருங்கால தேர்தல்களை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,004.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.