இந்திரா காந்தியும், எம்ஜியார் அவர்களும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு உயிர் வாழ்ந்திருந்தால் இலங்கையிலே தமிழீழம் உறுதியாக மலர்ந்திருக்கும். என்கிறார்கள் அரசியல் சாராத தமிழர்நலன் விரும்பும் இணைய ஆர்வலர்கள். 15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திரா காந்தியும், எம்ஜியார் அவர்களும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு உயிர் வாழ்ந்திருந்தால், இலங்கையிலே தமிழீழம் உறுதியாக மலர்ந்திருக்கும். பாகிஸ்தானிலிருந்து இந்திராகாந்தி அவர்கள் காலத்து இந்தியாவால், பிரித்து வழகங்கப்பட்ட வங்காளநாடு போல என்கிறார்கள். அரசியல் சாராத தமிழர்நலன் விரும்பும் இணைய ஆர்வலர்கள். ஆம்! அவர்கள் இருவரின் இறப்பு வரையிலுமே தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்சிதான் நடந்து வந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைந்தும் இருந்தது. உலகநாடுகள் எதுவும் சிங்களத்திற்கு ஆதரவாக களம் இறங்கவும் இல்லை. உண்மையில் தமிழீழம் முழுமையாக மலர்ந்திருந்தது, பன்னாட்டளவில் அங்கீகாரம் மட்டும் இல்லாமல். விடுதலைப்புலிகள்: தன்னாட்சி, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், இயக்க ஒழுக்கம், சாதிபேதமற்ற சமூகம், சம பெண் உரிமைகள், சமய சார்பின்மை, தனித்துவமான சமவுடமை ஆகிய கொள்கைகளை தமிழீழத்தில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தியிருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தனியான காவல் துறை, அறங்கூற்றுத்துறை, அரசியல் அமைப்புக்கள், இராணுவம், வைப்பகம், பொருளாதாரக் கட்டுமானங்கள், திட்டமிடல், வரி போன்றவற்றோடு பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தனித்தேசமாகவே இயங்கிவந்தது. தமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வந்தார்கள். இந்த அரசாங்கம் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. தமிழீழ மக்கள் கல்விக்கு மிக முதன்மைத்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90விழுக்காட்டிற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் பல்கலைக்கழகங்கள் ஆகும். தமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே முதன்மையாக மேற்கொள்கின்றனர். ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முதன்மையாகின்றது. நவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை உலகமயமாதல் என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முகப் பண்பாடு, பல் சமய, திறந்த சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும். தமிழீழம் 9 மாவட்டங்களைக் கொண்டது. அவை: யாழ்ப்பாணம் (சப்த தீவுகள் உட்பட), மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருக்கோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் என்பன. தமிழீழ விடுதலைப் புலிகள்- தமிழீழ தேசிய சின்னங்களாக- தேசிய விலங்கு சிறுத்தை, தேசிய மலர் காந்தள், தேசிய பறவை செம்பகம், தேசிய மரம் வாகை என்றும் அறிவித்திருந்தனர். தமிழினத்தின் இந்த வளர்ச்சிகளை எம்ஜியார் அவர்களும், இந்திராகாந்தி அவர்களும் இரசித்து மகிழ்ந்து வந்தார்கள். தமிழக மக்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை உலகளவிலான தமிழர் தலைவராக கொண்டாடினார்கள். இந்திரா காந்தி அவர்கள் 15ஐப்பசி 5086ல் (31.10.1984) காலமானார்கள். இந்திராகாந்தி அவர்கள் இறப்பு வரை- உலக நாடுகள், தமிழீழ விடுதலைப்புலிகள் ஆட்சிக்கு எதிராக- சிங்கள அரசு அதை ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு- இலங்கைக்கு உதவ ஒருபோதும் முன்வரவில்லை. ஆனால் இந்திராகாந்தியார் இறந்த மூன்றாண்டுகளில், இலங்கைக்கு உதவ, இந்தியாவே இலங்கையோடு ஒப்பந்தம் போடுகிறது. இந்திராகாந்தியார் இறப்பிற்கு பிந்தைய மூன்றாவது ஆண்டில், போடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப் படுத்தும் நோக்கில், இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் படையால் யாழ்ப்பாணத்தை தமிழ்ப் புலிகளிடமிருந்து மீட்டு புலிகளின் போர்க் கருவிகளைக் களைவதற்காக “பவான் நடவடிக்கை” என்ற பெயரில், பலாலி, காங்கேசன்துறை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இடங்களில் இருந்தும், விமானத் தரையிறக்கம் மற்றும் கடல் வழித் தரையிறக்கம் போன்ற பல முனைகளில் இருந்தும், இந்திய அமைதிப்படையின் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மூன்று கிழமையளவு நடைபெற்ற கொடுரமான போரின் பின்னர் இந்திய அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தால் 3 ஆண்டுகளாக முயன்றும் முடியாமல் போன யாழ் குடாநாட்டை கைப்பற்றினர். நடவடிக்கையின் போது இந்திய இராணுவம் கவச தாங்கிகள், உலங்கு வானுர்திகள், செறிவான ஆட்டிலரி என்பற்றின் துணைக் கொண்டு முன்னேறினர். இதன் போது இந்திய அமைதிகாக்கும் படையில் 600 பேர் சாவடைந்தனர். புலிகள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. இந்நடவடிக்கையில் இந்திய வான்படையினதும், இந்திய கடற்படையினதும் பங்களிப்புகள் கணிசமான அளவு காணப்பட்டது. இந்திய கிழக்கு கட்டளைப் பீடமும், கரைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து புலிகளுக்குப் போர்க்கருவி, மருத்துவ உதவிகள் என்பன கிடைக்காதவண்ணம், இலங்கையின் வடக்கே கடலில் 300 கி.மீ. நீளமான முற்றுகை வேலியை அமைத்திருந்தன. இந்நேரத்தில் இந்திய சிறப்பு ஈரூடக படையணியினரும் (மார்க்கோஸ்) முதலாவதாகச் செயற்படத் தொடங்கியிருந்தனர். இவர்களோடு இந்திய இராணுவத்தினரும் இணைந்து யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் கடற்கறை ரெகிகளை வழங்கியிருந்தன. சிறப்புப் படையணியினர் புலிகளின் குருநகர்த் தளத்தை ஈருடகத் தாக்குதல் மூலம் தாக்கி அழித்தனர். இலங்கையின் வரலாற்றிலேயே அதிக நாட்களைக் கொண்ட ஊரடங்கு உத்தரவு, இந்திய அமைதி காக்கும் படையினரால் பிறப்பிக்கப்பட்டது. யாழ் குடா நாட்டினைக் கைப்பற்றும் நோக்கத்துடன் முப்பத்து ஐந்து நாட்கள் பிறப்பிக்கப்பட்ட இவ்வூரடங்கு உத்தரவின்படி, இத்தகு நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல்ரீதியாக கிடைக்கப்பெற்ற உத்தரவுகளிற்கேற்ப மேற்கொள்ளப்பட்டன. இந்திய அமைதி காக்கும் படையின் யாழ் பல்கலைக்கழகத் தாக்குதல், இந்திய அமைதி காக்கும் படையின் யாழ் மருத்துவமனைப் படுகொலைகள், இந்திய அமைதி காக்கும் படையின் வல்வெட்டித்துறைப் படுகொலைகள், இந்திய அமைதி காக்கும் படையின் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் பலதாக்குதல்களை இந்திய அமைதிப்படை முன்னெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்திராகாந்தி, எம்ஜியார் இறப்பிற்குப் பிறகு தமிழீழத்திற்கு ஆதரவாக இந்திய முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாடு என்று ஒன்று இருக்குமேயானால் அது இத்துனைச் சிறப்புகளோடு விடுதலைப் புலிகளால் கட்டமைக்கப் பட்டு விட்ட தமிழீழத்தை அங்கீகரிப்பது மட்டுமேயாகும். ஆனால் நடந்ததோ வேறு! தமிழீழத்தை பிடுங்கி சிங்களப் பேரினவாதிகள் கையில் ஒப்படைக்க இந்திரா காந்தியின் இறப்பிற்கு பிந்தைய காங்கிரசும், அப்போது காங்கிரசுக்கு தமிழகத்தில் ஆதரவாகி விட்ட திமுகவும் மடைமாற்றப்பட்டன. அந்த மடைமாற்றத்தில் ஈடுபட்ட சக்திகள்- இராஜிவ்காந்தி இறப்பிற்கும், தமிழீழம் சிங்களத்தால் ஆக்கிரமிக்கப் படுவதற்கும், விடுதலைப்புலிகளோடு ஒரு இலட்சத்து நாற்பத்திஆறாயிரம் ஈழத்தமிழர்கள் கொன்றொழிக்கப் படுவதற்கும், தமிழகத் தமிழர்களின் தலைகுனிவிற்காக இராஜிவ் கொலையை முன்னெடுத்தவர்கள் தங்கள் இனத்தவர் என்பது போன்ற மாயைக்கும் என ஒற்றை நகர்வில் பல காய்களை நகர்த்தி விட்டார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,353.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.