பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயில் சேருமாறு பீகார் மாணவனுக்கு
போனில் அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பீகாரின் ராய்மூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
முகேஷ்குமார். இவர் அப்பகுதியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். பகுதி நேரமாக அங்குள்ள
துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பாபுவா காவல் நிலையத்தில் புகார்
தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நேற்று முன்தினம் எனது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு
வந்தது. அதில், பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐயில் சேர வருமாறு ஒருவர் கூறினார்.
இதுபோல் ஏற்கனவே ஒரு தடவை போன் வந்தது. நான் அதை அப்போது பெரிதுபடுத்தவில்லை. ஆனால், மீண்டும் அதுபோன்ற அழைப்பு வந்ததால், எனக்கு
சந்தேகமாக உள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.இதுகுறித்து
போலீஸ் எஸ்.பி. ஹர்ப்ரீத் கவுர் கூறுகையில், பாக். ஐஎஸ்ஐ விடுத்த அழைப்புக்கு அந்த மாணவர் உடனடியாக
மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் தலைமையகத்துக்கு தெரிவித்துள்ளோம்.
உரிய விசாரணை நடந்து வருகிறது என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



