Show all

சீனா மருத்துவ நீட்டில் இயந்திரமனிதன் முதல் மதிப்பெண்

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீனாவில் மருத்துவர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இயந்திரமனிதன் சாதனை படைத்துள்ளது.

சீனாவின் தொழில்நுட்ப நிறுவனம்; மற்றும் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இயந்திரமனிதன், மருத்துவர் தகுதி தேர்வில் 456 மதிப்பெண்களை பெற்றது. இத் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 360 ஆகும்.

சீனாவில் இந்தாண்டு 5.30 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இதில் இயந்திரமனிதனும் தேர்வு எழுதியது. மனிதர்கள் போன்றே வழங்கப்பட்ட நேரத்தில் தேர்வில் பதிலளித்தது. இணைய வசதி மற்றும் சமிக்ஞை வசதி தொடர்பில் இல்லாமல் இயந்திரமனிதன் தேர்வை எழுதியது. இதில் எந்த ஒரு மோசடியும் நேரிடவில்லை எனவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இயந்திரமனிதன் தன்னிச்சையாக படிப்பதிலும், பிரச்னையைத் தீர்ப்பதிலும் தேர்ந்து உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும்காலங்களில் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் மருத்துவர்களுக்கு உதவியாக இந்த இயந்திரமனிதன் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,601

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.